Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முகமூடி போட்டு மறைக்கப்படும் டெக்னீஷியன்கள்! - மிஷ்கின் விளக்கம்!!

24 ஜூலை, 2012 - 16:50 IST
எழுத்தின் அளவு:

 முகமூடி ஆடியோவை சத்யம் சினிமாவில் விஜய்-புனித்ராஜ்குமார் உள்ளிட்ட வி.ஐ.பி.கள் மூலம் ஒரு சில நாட்களுக்கு முன் காலையில் ரிலீஸ் செய்துவிட்டு அன்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் ப்ரீவியூ திரையரங்கில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் முகமூடியின் எழுத்தாளரும், இயக்குநருமான மிஸ்கின்.

இது எனது கனவுப்படம், சின்னவயது முதல் நான் கனவு கண்டிருந்த கதை இது. ஸ்கூல்டேஸில் நான் பாடப்புத்தகங்களை படித்ததைவிட காமிக்ஸ் புத்தகங்களை படித்து வளர்ந்தவன். இப்படி ஒரு கதையை படம் பண்ண வேண்டும் என்றதும் இந்த கதையை கோடம்பாக்கத்தில் என்னிடம் கேட்காத ஹீரோக்களே கிடையாது. விஜய், விஷால், சிம்பு என்று பல ஹீரோக்களுக்கும் இந்த கதையை நான் சொல்லி இருக்கிறேன். ஆனால் அது ஜீவா நடிக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது. அவர் நான் எதிர்பார்த்ததைவிட பிரமாதமாக நடித்து இருக்கிறார். இந்தபடத்திற்கு பின் அந்த தம்பிக்கு பெரிய பிரேக் கிடைக்கும். சூப்பர் ஹீரோவின் டிரஸ்ஸை மாட்டிக்கொள்வதற்கே தனி பலம் வேண்டும். அந்த உடையை 92 நாட்கள் மாட்டிக்கொண்டு ஜீவா பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்தார் மனிதர். அவரை மாதிரியே இந்தப்படத்திற்காக நாயகி பூஜா ஹெக்டே, சகநட்சத்திரங்கள் நரேன், நாசர், செல்வா உள்ளிட்டவர்களும், இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் சத்யா உள்ளிட்ட ஒவ்வொருவரும் அவர்களது இணை, துணை உதவியாளர்களும் முகமூடிக்காக உழைத்திருக்கின்றனர்.

அத்தனை பேருக்கும் இந்த தருணத்தில் நன்றி! என்று அப்படி, இப்படி பேசிக்கொண்டே போன மிஷ்கினை மடக்கி விவரமான நிருபர் ஒருவர், எல்லாம் சரி, இதுவரை வெளிவந்த இந்த படத்தின் பப்ளிசிட்டிகளில் நடிகர் ஜீவாவின் பெயர், உங்களது பெயர், தயாரிப்பாளர்களின் பெயர் தவிர மற்றவர்களின் பெயர்கள் முகமூடிக்குள்ளேயே மறைக்கப்பட்டிருப்பதின் காரணம் என்ன...? என எக்குதப்பாக கேட்க மனிதர் அலட்டிக்கொள்ளாமல், நான் ஜீவாவின் முகமூடி என்று கூட போட வேண்டாம் என்று தான் சொன்னேன். ஜீவா தரப்பு தான் அதை கேட்கவில்லை. அவ்வளவு ஏன் என் பெயரை கூட நான் விரும்பவில்லை, ஆனால் தனஞ்செயன் கேட்கவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த மாதிரி படங்களுக்கு ரசிகர்கள் வருவது தான் சரியாக இருக்கும் என்றார் மிஷ்கின்.

உடனே அவரை முந்திக்கொண்டு யு.டி.வி. தென்னிந்திய தலைமை அதிகாரி தனஞ்ஜெயன் எங்களுக்கும் எல்லோரது பெயரையும் பத்திரிக்கை விளம்பரங்களில் போட வேண்டும் என்று ஆசை தான்! ஆனால் விளம்பரங்களை அத்தனை பெரிசாக கொடுக்காதே‌, இத்தனை சிறியதாக ‌கொடு என்று தமிழ் திரையுலகில் சகட்டுமேனிக்கு சகலரும் சொல்லுவதால் விளம்பரங்களில் பல டெக்னீஷியன்களின் பெயர்களை இடம் பெற செய்யமுடியவில்லை என்றார்.

அதற்காக முகமூடி படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா, இசையமைப்பாளர் கே இவர்களது பெயர்கள் எல்லாம் கூட இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது ரொம்பவே ஓவருங்க தனஞ்ஜெயன்!

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

அம்மு - gingee,இந்தியா
26 ஜூலை, 2012 - 12:32 Report Abuse
 அம்மு ஜீவா முகத்த மறைக்க முகமுடி இருக்கு ஹெரோஇன் தொடையாய மறைக்கக துணி மணி இருந்த போடுங்கப்பா ரொம்ப கண்ட்ரவிய இருக்கு
Rate this:
சொட்ட தலையன் - dubai kurukku theru ,சிங்கப்பூர்
25 ஜூலை, 2012 - 22:48 Report Abuse
 சொட்ட தலையன் முதலில் உன் கூட இருக்கும் கவர்ச்சி கன்னியின் தொடை அழகாய் மறைக்க துணி இருக்கிறாதா என்கிற வழியை பாரு..பிறகு மற்றவனை பற்றி பார்க்கலாம்.போறம் போக்குகளா.
Rate this:
பயில்வான் - srivi,இந்தியா
25 ஜூலை, 2012 - 15:58 Report Abuse
 பயில்வான் well said ராஜ்பால் - Kovai ,India
Rate this:
ராஜ்பால் - Kovai,இந்தியா
25 ஜூலை, 2012 - 10:20 Report Abuse
 ராஜ்பால் முகமூடி மறைக்கிறது இருக்கட்டும். ஹீரோயின் கஷ்ட்டப்பட்டு மறைச்சிட்டு இருக்கிறாங்க பாருங்க!
Rate this:
saravanan - pudukkoottai,இந்தியா
25 ஜூலை, 2012 - 10:00 Report Abuse
 saravanan ஹீரோ
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in