சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! | குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! |
தி டார்க் நைட் ரைசஸ் எனும் பேட்மேன்-3 படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி தமிழ்படுத்தி உதயநிதிஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பட நிறுவனம் தமிழகம் எங்கும் ரிலீஸ் செய்ய காரணம், உதயநிதி, அடுத்தமாதம் ரிலீஸ் ஆக இருக்கும் பேட்மேனின் டூப்ளிகேட் முகமூடியை விநியோகிக்கும் உரிமையை இயக்குநர் மிஷ்கினிடமும், யு.டி.வி., தனஞ்ஜெயனிடமும் கேட்டாராம். அதற்கு அவர்கள் நோ சொல்லவே பேட்மேன்-3யை பிரமாதமாக தமிழ்படுத்திவிட்டாராம். இதுஒருபுறம் இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகமூடி படத்தின் ஆடியோ ரிலீஸை தொடர்ந்து மதியம் 3 மணியளவில் பிரஸ்மீட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது முகமூடி டீம். அதேநாளில் மதியம் 12 மணியளவில் பேட்மேன்-3 படத்தின் பத்திரிக்கையாளர்களுக்கான காட்சியையும் ஏற்பாடு செய்திருந்தார் உதயநிதி. இதனால் முகமூடி பிரஸ்மீட் நிகழ்ச்சியை கொஞ்சம் தாமதமாக ஆரம்பித்துள்ளனர். இப்படியாக உதயநிதிக்கும், முகமூடி குழுவுக்கும் ஒரு "கோல்டு வார்" நடந்து வருகிறது.