தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளாவில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராகத் திகழும் மோகனன் இயக்கத்தில், "916" என்ற மலையாளப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகை மோனிகா, மாற்றுத்திறனாளியும், அறிமுக இயக்குனருமான டி.சாமிதுரை இயக்கத்தில் உருவாகியிருக்கும் குறும்புக்கார பசங்க படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் எப்படியும் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் பிடிவாதமாக ஒரு நாள் அனுமதி வாங்கிக் கொண்டு கோழிக்கோட்டில் இருந்து சென்னைக்குப் பறந்து வந்திருந்தார்.
படம்குறித்து மோனிகாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, குறும்புக்கார பசங்கள்ல ஹீரோ வர்ற சஞ்சீவுக்கு நான் தான் ஜோடி. நானும் கிராமத்துக் குறும்புகள் நிறைந்த சிந்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சஞ்சீவ் நல்ல திறமையான நடிகர். அவருடன் நடிப்பதை ஒரு போட்டியாக எடுத்துக் கொண்டுதான் நடித்தேன். மற்றபடி படத்தின் பெயரில் தான் குறும்பு இருக்கிறதே தவிர நல்ல அன்பான டீம்.
டைரக்டர் குறித்து மோனிகா கூறியதவாது, முதன் முதலாக இயகுனர் சாமித்துரையைச் சந்தித்த போது, இவர் எப்படி படம் பண்ணப்போகிறார் என்கிற சிந்தனை எனக்கு எழுந்தது. ஆனால் அவரது கதை சொல்லும் திறமை, நடிகர்கள் உட்பட அத்துனை பிரிவினரையும் வேலை வாங்கிய விதம் என்னை வியக்க வைத்தது. மேலும் படப்பிடிப்புத் தளத்தில் அவர் ஒரு சிறந்த இயக்குனராக விளங்கினார். அவரது புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை அவரது இணை இயக்குனர்கள் மாரி மற்றும் சீனு ஆகியோரது மனித உழைப்பின் மூலம் வெளிப்படுத்தினார். அவரை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் ரவிராஜனையும் பாரட்டியே ஆக வேண்டும்.
அழகில அறிமுகமானதிலிருந்து குறும்புக்கார பசங்க வரை அதே அழகியாகவே இருக்கிறீர்களே எப்படி..?
ஹா ஹா.... குறும்புக்கார பசங்கள்ல நான் மட்டும் இல்லை எல்லா நடிகர்களையும் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளையும் ஒளிப்பதிவாளர் பாண்டியன் மிகவும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார். எப்பவுமே நான் அழகா இருக்கிறேன் என்று நீங்கள் கூறினால் அதற்குக் காரணம் நான் எப்பவுமே உள்ளத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தான் காரணம்... எனக்குக் கிடைத்த வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாகச் சந்திக்கிறேன்... ஒவ்வொரு வினாடியையும் மகிழ்ச்சியாகவே கடக்க ஆசைப்படுகிறேன்... என்னைப் பொறுத்துவரை அழகு வெறுமனே புறத்தோற்றம் சார்ந்ததல்ல... அது அகமகிச்சியில் விழைவது....
அது என்னங்க 916-ன்னு பட தலைப்பு?
ப்யூரிட்டி ஆப் எமோஷன் மற்றும் ப்யூரிட்டி ஆப் லவ்.. அது தான் 916. எல்லாருமே அந்தபடத்தை மிகவும் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
அடுத்த தமிழ்ப்படம்..?
அறிமுக இயக்குனர் பத்மராஜன் இயக்கத்தில், மாசானி என்கிற படத்தில் நடிக்க இருக்கிறேன். ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக நடிக்கவிருக்கிறேன்...மிகவும் சவாலான வேடம்... நிச்சயம் மோனிகாவை இன்னொரு தளத்திற்கு இட்டுச் செல்லும் படமாக அது இருக்கும் என்று சொல்லிவிட்டு மீண்டும் கேரளா பறந்துவிட்டார் மோனிகா.