சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் | வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி! | நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர் | ஷார்மியின் 12 வருடகலை சாதனை | இந்தியில் நடிக்க நேரமில்லை! - டாப்ஸி | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும் வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! அட்டகத்தி நந்திதா | "நவ் யு சி மீ |
ஜீவா நடித்த ரெளத்திரம் படம் சரியாக போகாததால், அவரிடம் நஷ்டஈடு கேட்டுள்ளனர் தியேட்டர் அதிபர்கள். ஜீவா-ஸ்ரேயா நடிப்பில், கோகுல் இயக்கத்தில் வெளிவந்த படம் ரெளத்திரம். இப்படத்தை ஜீவாவின் அப்பா ஆர்.பி.சவுத்ரி தயாரித்து இருந்தார். தமிழ் தவிர இப்படம் தெலுங்கில் ரச்சா என்ற பெயரில் வெளியானது. இரண்டு மொழியிலும் இப்படம் சரியாக ஓடவில்லை. இதனால் தியேட்டர் அதிபர்கள் ஜீவாவிடம் ரூ.65 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வற்புறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம் கூறும்போது, தியேட்டர் உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ரூ.65 லட்சம் நஷ்டஈடு தர ஒப்புக் கொண்டது உண்மைதான். ஆனால் இப்போது வரை கொடுக்கவில்லை. இதுகுறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றார்.
இதனிடையே ரெளத்திரம் படத்திற்கு நஷ்டஈடு தராததால், ஜீவாவின் இனி வரக்கூடிய படங்களை புறக்கணிக்க தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளனர்.