ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்திப்படமொன்றில் நடிகர் அமிதாப் பச்சன் ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கவுள்ளார். நடிகை குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்து அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். குழந்தைகளை கவனிப்பதற்காக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் மேட் டாட் என்ற இந்திப் படத்தில் குஷ்பு நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளார். இதில் அமிதாப்பச்சன் ஜோடியாக நடிக்கிறாராம். அமிதாப்புடன் நடிக்கப் போவதால் மகிழ்ச்சியில் இருக்கும் குஷ்பு, இதுபற்றி அளித்துள்ள பேட்டியில், சிறு வயதில் இருந்தே நான் அமிதாப்பின் தீவிர ரசிகை. அவர் படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். இப்போது அமிதாப் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதால் சந்தோஷமாக இருக்கிறது, என்று கூறியுள்ளார்.