ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜேஷ் கன்னா மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய திரையுலகில் ஜொலித்த நட்சத்திரங்களில் மறைந்த ராஜேஷ் கன்னாவும் ஒருவர். அவர் மறைவு செய்தி கேட்டு, தென்னிந்திய திரையுலகம் குறிப்பாக, தென்னிந்திய நடிகர் சங்கம் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. அவர் நடித்த இந்தி திரைப்படங்கள் பல, தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், மும்பை திரையுலகினருக்கும் ஏற்பட்டுள்ள சோகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் பங்கேற்பதுடன், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.