Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கண்ணா மரணம்!

18 ஜூலை, 2012 - 14:31 IST
எழுத்தின் அளவு:

 இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா மரணம் அடைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் ராஜேஷ் கன்னா. இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உணவு கூட உட்கொள்ள முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு கல்லீரல் தொற்று நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர் ‌தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தும் அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லாததால் நேற்றுமுன்தினம் (17.07.12) வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று (18.07.12) அவர் மரணம் அடைந்துவிட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அவரது மருமகனும், நடிகருமான அக்ஷ்ய் குமார் செய்தியாளர்களை சந்தித்து உறுதிப்படுத்தினார்.

1942-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி அமிர்தசரஸில் பிறந்தவர் ராஜேஷ் கன்னா. பின்னர் 1966-ம் ஆண்டு அஹாரி காத் என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ் கன்னா. தொடர்ந்து ஆராதனா, ராஸ், பரோன் கே சப்னா உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1960-70களில் முன்னணி கதாநாயகராக ஜொலித்த ராஜேஷ் கன்னா சில படங்களை தயாரித்தும், சில பாடல்களை பாடியும் உள்ளார். இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்ற பெருமை இவருக்கு உண்டு. மேலும் நடிகர், தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல் அரசியலிலும் கால் பதித்து உள்ளார் ராஜேஷ். காங்கிரஸ் கட்சி சார்பாக பார்லிமென்ட்டில் எம்.பி.,யாகவும் இருந்துள்ளார்.

மறைந்த ராஜேஷ் கன்னா, இந்தி நடிகை டிம்பிள் கபாடியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு டிவிங்கிள் கன்னா, ரிங்கி கன்னா என்ற இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களும் இந்தி சினிமாவில் நடிகையாக உள்ளனர். இந்தி நடிகர் அக்ஷ்ய் குமார் ராஜேஷ் கன்னாவின் மருமகன் ஆவார்.

மறைந்த ராஜேஷ் கன்னாவின் உடல், மும்பையில் உள்ளது அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் கண்ணா மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். அவரது இறுதிசடங்கு இன்று(19.07.12) நடைபெறுகிறது.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

ராஜேஷ்.ர. - doha.,இந்தியா
25 ஜூலை, 2012 - 11:33 Report Abuse
 ராஜேஷ்.ர. அனாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
bala - coimbatore,இந்தியா
19 ஜூலை, 2012 - 12:24 Report Abuse
 bala வி மிஸ் யு ராஜேஷ் கண்ணா
Rate this:
rajan - chennai,இந்தியா
19 ஜூலை, 2012 - 06:14 Report Abuse
 rajan ராஜேஷ்கன்னாவின் பலபடங்கள் மக்களால் விரும்பப்பட்டது. அந்தநாளில் காலேஜ் படித்த பல மாணவிகள் அவருடைய போட்டோவை வைத்து திருமணம் செய்து கொண்டார்கள், சில மாணவிகள் அவர்களுடைய ரத்தத்தால் காதல் கடிதம் எழுதினார்கள். இவர் தான் உண்மையான காதல் மன்னன். அப்படிப்பட்ட ஒரு நடிகரை இந்தி திரைபட உலகம் இழந்துள்ளது பேரிழப்புதான். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Rate this:
சேகரன் நா - ramanathapuram,இந்தியா
19 ஜூலை, 2012 - 02:48 Report Abuse
 சேகரன் நா அன்னாரின் அன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் .
Rate this:
thama - toronto,கனடா
19 ஜூலை, 2012 - 02:16 Report Abuse
 thama சூப்பர் ஹீரோ ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in