வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!! | தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்! | சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! | விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை...! | 2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு! | ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!! | நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! ஸ்ருதிஹாசன் | ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! | லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்! | ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்! |
புதிதாக உருவாகி வரும் நீர்ப்பறவை படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில், நாயகனும், நாயகியும் 100க்கும் மேற்பட்ட முத்தங்களை கொடுத்து கிளுகிளுப்பேற்றியிருக்கிறார்கள். தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படம் நீர்ப்பறவை. இந்த படத்தில் நாயகனாக விஷ்ணுவும், நாயகியாக சுனைனாவும் நடிக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் கதாநாயகி சுனைனாவுக்கு, நாயகன் விஷ்ணு முத்தம் கொடுப்பதுபோல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.
இந்த குறிப்பிட்ட ஒரு பாட்டுக்கு மட்டும் இருவரும் ஒருவருக்கொருவர் 100க்கும் மேற்பட்ட முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு பாடலுக்கு அதிக முத்தம் கொடுப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள். தேவன் மகளே தேவன் மகளே.... எனத்தொடங்கி தொடரும் பாடலுக்கே இந்த காட்சிகள் படமாக்கப்பட்டது. நீர்ப்பறவை படத்தில் தம்பி ராமையா, சரண்யா பொன்வன்னன், நந்திதா தாஸ், அழகம் பெருமாள், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.