டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இசைஞானி இளையராஜாவின் இளைய வாரிசான யுவன் ஷங்கர் ராஜா அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக தன்னுடைய 16 வயதில் அறிமுகமானார். தனது இளைமை துள்ளும் இசையால் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை தந்துள்ளார். தனது தந்தையின் பெயரை காப்பாற்றும் வகையில் இசையமைப்பதோடு இல்லாமல் பல்வேறு பாடல்களும் பாடியும் அசத்தி வருகிறார். இவரது சாதனைக்கு மணிமகுடமாய் தற்போது தனது 100 வது படத்திற்கு இசையமைக்கவுள்ளார். அந்தப்படம் வெங்கட்பிரபு இயக்கத்தில், கார்த்தி, நடிக்கும் பிரியாணி படம். இது யுவன் இசையமைக்கும் 100வது படம் என்பதால் ரொம்ப விஷேமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.