Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நான்... கவுண்டமணி... வாழைப்பழம்! - சிரிப்பு செந்தில் சொல்லும் பிளாஷ்பேக்!

15 ஜூலை, 2012 - 16:00 IST
எழுத்தின் அளவு:

இவரா... இந்த காமெடியெல்லாம் பண்ணினாரு என ஆச்சரியப்பட வைக்கும் உருவம். யாராக இருந்தாலும், "அண்ணே... என பாசம் காட்டும் அன்பு. சிறுசு முதல் பெரிசு வரை விரும்பும் "சிரிப்பு முகம். எல்லோரும் இவருக்கு ரசிகர்கள். "வாழைப்பழம் இருக்கும் வரை, இவர் காமெடி வாழும். அடிவாங்கியே, அனைவரையும் சிரிக்க வைத்த வெள்ளந்தி மனிதர் நடிகர் செந்தில்.

மதுரையில் அவரை, "மண்ணும் மனசும் பகுதிக்காக சந்தித்தோம். இதோ, அவரே பேசுகிறார்... ""சொந்த ஊரு பரமக்குடி பக்கம் இளஞ்செம்பூரு. அப்பா ராமமூர்த்தி, மளிகை கடை வச்சிருந்தாரு. எனக்கு படிப்பு வரலை. ஊருல இருந்தா கெட்டு போயிருவேனு, 13 வயசுல, அப்பா, நண்பர் சுல்தானுடன் சென்னைக்கு அனுப்பினாரு. அங்கே பர்மா பஜாரில் கொஞ்ச நாள் வேலை. சின்ன வயசிலிருந்தே நாடகம்னா ரொம்ப இஷ்டம். அப்பவே நரிக்குறவர் வேடம் போட்டேன். சென்னை வந்த பிறகு, ஆர்வம் அதிகமாச்சு. சி.எஸ்., நாடக கம்பெனியில சேர்ந்தேன். முதல் அரிதாரம், தாத்தா வேடம். வைரம் நாடக கம்பெனியில், சின்ன வேடங்கள் கெடச்சது.

காமெடி வசனகர்த்தா ஏ.வீரப்பனை சந்தித்த பின், ஏறுமுகம் தொடங்குச்சு. அவர் தான் சில படங்களில் என்னை சிபாரிசு பண்ணாரு. நானும் முயற்சி செஞ்சேன். மலையாளத்தில் "இத்திகரபக்கி தான் என் முதல் படம். தமிழில், "பசி படத்தில் வில்லன் வேடம்.  டைரக்டர்கள் பாக்யராஜ், சுந்தரராஜன் தொடர் வாய்ப்பு தந்து, என்னை தூக்கிவிட்டாங்க. "மலையூர் மம்பட்டியானில் வில்லன் வேடத்திற்கு, டைரக்டர் ராஜசேகர் கூப்பிட்டாரு. "வளர்ந்து வர்ற நேரத்துல, வில்லன் வேடம் கொடுத்து உட்கார வச்சிருவாங்களேன்னு பயந்து, 10 நாள் அவர் கண்ணுல படலை. மேலாளர் துரை என்பவரு, இந்த படத்தில நடிச்சா நல்ல பேரு கிடைக்கும்னாரு. அதை நம்பி நடிச்சேன். அவரு சொன்னது நடந்துச்சு.

என்னையும், கவுண்டமணியையும் சேர்ந்து ஏ.வீரப்பன் நடிக்க வச்சாரு. எங்கள் கூட்டணி, 500 படங்களில் தொடர்ந்துச்சு. நான் நாடகத்துல நடிக்கும்போதே, கவுண்டமணி அண்ணனும் நடிச்சாரு. அப்பவே நாங்க சேர்ந்து நடிச்சிருக்கோம். "சூட்டிங் சமயத்தில் கவுண்டமணி சிரிக்கமாட்டார். கரகாட்டக்காரன் "வாழைப்பழ காமெடியை பார்த்து, விழுந்து... விழுந்து... சிரிச்சாரு! இப்பெல்லாம், காமெடி நடிகர்கள் சிலரு, ஒரு "டீமை உருவாக்கி நடிக்கிறாங்க. நாங்க எல்லாம், டைரக்டரு சொல்றதை நடிச்சு பேரு வாங்கினோம். இப்போ, "டபுள் மீனிங்கில காமெடி வருது. அப்போ, பட்டும், படாமல் இருக்கும். அதை குடும்பத்தோட ரசிச்சாங்க...

இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பிரெஞ்சு படங்களில்கூட நடிச்சிட்டேன். நடிக்காத வேடமில்லை. ஆனா நான் வாழ்க்கையில் நடிக்கலண்ணே.. அதனால "பீஸ் புல்லா போயிட்டு இருக்கு, அதுபோதும்! நான் சாகிற வரைக்கும் நடிச்சிட்டே இருக்கணும் அதுதான்ணே... என், ஆசை! என்கிறார் இந்த 59 வயது இளைஞர்.

சிரிக்க வச்சாரு நம்பியாரு!

"தூறல் நின்னு போச்சு படத்துல தான் முதன்முதலில், பாக்யராஜ் என்னை அரை டவுசருல நடிக்க வெச்சாரு. சூட்டிங் இடைவெளில, ஆத்துல குளிச்ச போது, ஜட்டி "மிஸ் ஆயிருச்சு. பிறகு, ஒரு வேட்டியை கிழிச்சு, கோவணம் கட்டிக்கிட்டு, அதுக்கு மேல அரை டவுசர் போட்டு நடிச்சேன். இதை எப்படியோ நம்பியாரு தெரிஞ்சுகிட்டு, எல்லாருகிட்டேயும் சொல்லிப்புட்டாரு. பிறகென்ன அவுங்களோட சேர்ந்து நானும் அந்த "காமெடியை நினைச்சு நினைச்சு சிரிச்சேன்.

பார்வைக்கு காத்திருக்கேன்!

எம்.ஜி.ஆர்., மீது ஈர்ப்பு இருந்ததுனால அ.தி.மு.க.,வில் சேர்ந்தேன். அவருக்கு பின், ஜெயலலிதா மீது பற்று ஏற்பட்டுச்சு. முதன்முதலாக, 1989ல் திருச்சியில் மேடையில் பேச அவர் அனுமதி கொடுத்தாங்க. அரசியலில் இருந்ததால, படவாய்ப்புகளை தி.மு.க., வினர் தடுத்தாங்க. நெருக்கடியும் வந்துச்சு. அதையும் சமாளிச்சேன். இதுவரை அரசியலில் எந்த பதவியும் தரலை. அதனால் வருத்தமில்லை. பழம் நழுவி விழுந்தால் வேணாம்னு சொல்வாங்களா? "அம்மா பார்வை படும்னு நம்புறேன்!

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Palaniappan.s - Aranthangi,இந்தியா
10 பிப், 2013 - 09:47 Report Abuse
 Palaniappan.s அரசியல் வேண்டாம். நீங்க மீண்டும் படத்திலே நடிக்க வேண்டும்.
Rate this:
GobiGaneshan - namakkal : tamilnadu,இந்தியா
21 ஜூலை, 2012 - 21:40 Report Abuse
 GobiGaneshan செந்தில் அருமையான காமெடி நடிகர்.
Rate this:
lakshmanan - villupurm  ( Posted via: Dinamalar Android App )
16 ஜூலை, 2012 - 12:45 Report Abuse
lakshmanan அருமையான நகைச்சுவை ஜோடி உலக தமிழ் சினிமாவில்
Rate this:
சிவா - ofallon,யூ.எஸ்.ஏ
16 ஜூலை, 2012 - 06:04 Report Abuse
 சிவா அடி வாங்கியே மத்தவங்கள சிரிக்க வெச்சவரு :)
Rate this:
ராஜேஷ் - madurai,இந்தியா
15 ஜூலை, 2012 - 23:35 Report Abuse
 ராஜேஷ் கடைசி வர நடிகராவே இருங்கண்ணே, அதிமுக வோ திமுக வோ.. நமக்கு அரசியல் வேணாம்ணே. கஷ்டப்பட்டு வாங்குன பேரு போயிடும்னே.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in