பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
யோஹன் அத்தியாயம் படத்தில் விஜய் ஜோடியாக, ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை கமர்ஷியலாக நடித்து வந்த விஜய் சமீபகாலமாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் நடிக்க துவக்கியுள்ளார். நண்பன் படத்திற்காக ஷங்கர் உடன் இணைந்த விஜய் அடுத்தபடியாக முருகதாஸின் துப்பாக்கியில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து கவுதம் மேனனின் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை உலகளவில் கொண்டு செல்ல கவுதம் திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாகத்தான் படத்துக்கு யோஹன் என பெயரிடப்பட்டுள்ளது. இது உலகளவில் நன்கு பிரபலம் அடைந்த பெயராகும்.
இந்நிலையில் படத்தில் இன்னொரு ஹைலைட்டாக விஜய்க்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை ஒருவரை நடிக்க வைக்க கவுதம் எண்ணியுள்ளதாவும், தற்போது அதற்கான வேலையில் கவுதம் இறங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் ஹாலிவுட் நடிகையோடு, படத்தின் முழு அறிவிப்பையும் கவுதம் வெளியிடுவார் எனத் தெரிகிறது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதும் விஷேமானது. கவுதம்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் அமையவுள்ள 2வது படம் யோஹன் என்பதும், விஜய்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணிக்கு இது 3வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.