Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

பத்மப்ரியா மீது பரபரப்பு புகார்!

complaints against padmapriyaதயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகை பத்மப்ரியா மீது பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மிருகம், தவமாய் தவமிருந்து, பட்டியல் போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை பத்மபிரியா. இவர் தற்போது நம்பர் 66 மதுரை பஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டைரக்டர் எம்.ஏ.நிஷாத் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில் டைரக்டர் எம்.ஏ.நிஷாத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகை பத்மப்ரியா மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், நடிகை பத்மப்ரியா தனது மேனஜருக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர் படப்பிடிப்புக்கு வருவதில்லை. இதனால் எனக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் நம்பர் 66 மதுரை பஸ் படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மறுத்து விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags »
padmapriya, பத்மப்ரியா,
Share  
Bookmark and Share

தொடர்புடையவை



வாசகர் கருத்து (1)

சொட்டை சோதிலிங்கம் - pichai eduppor kurukku theru,இந்தியா
2012-07-14 13:05:10 Report Abuse
 சொட்டை சோதிலிங்கம் நடிகையோட மேனஜருக்கு மட்டும் தானே கேட்டார்கள்..அவுக நாய் குட்டிக்கு எதுவும் கேக்கலியே.....கேளு கேளு...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in