Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாதவர் அஜித்! ஒளிப்பதிவாளர் ராஜசேகர்

12 ஜூலை, 2012 - 17:48 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் அஜித் நுழைந்தபோது எப்படி இருந்தாரோ, அதேப்போல இப்போதும் மாறாமல், பெரிய நடிகர் என்ற பந்தாவும் இல்லாமல் இருக்கிறார் என்று பில்லா-2 ஒளிப்பதிவாளர் ராஜசேகர் கூறியுள்ளார். அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா உள்ளிட்ட பலரது நடிப்பில், சக்ரி டோல்டி இயக்கத்தில், ஒய்டு ஆங்கிள் மற்றும் ஐ.என்.இ இணைந்து தயாரித்து பிரமாண்டமாய் உருவாகி இருக்கும் படம் பில்லா-2. இப்படம் ஜூலை 13ம் தேதி முதல் உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதன்பின்னர் தினமலருக்கு பேட்டியளித்த இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் கூறியதாவது, பில்லா-2 படத்தில் ஒளிப்பதிவு செய்தது ரொம்ப சவாலாக இருந்தது. எல்லா மனிதனும் கொள்ளைக்காரனாக பிறப்பதில்லை. அதுபோலத்தான் பில்லா-2விலும் அஜித் சாதாரண மனிதனாக இருந்தவர் எப்படி பில்லாவாக மாற்றப்பட்டார். அதற்கான சூழ்நிலை அமைந்தது எப்படி என்பதே இப்படத்தின் மையக்கரு. அதை ரொம்ப அழகாகவும், அருமையாகவும் படமாக்கியுள்ளோம். ஆசியாவிலேயே முதன்முறையாக இந்தபடத்தில் தான் எபிக் எனும் 5கே ‌ரெசல்யூசன் காமிராவை பயன்படுத்தியுள்ளோம். இதற்காக தென் ஆப்ரிக்காவில் இருந்த பிரத்‌யேகமான லென்ஸ் வரவழைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. பில்லா-2வின் பெரும்பகுதியை ஐதரபாத், கோவா, ‌மும்பை மற்றும் ஜார்ஜியாவில் படமாக்கினோம். அதிலும் ஜார்ஜியாவில் மைனஸ் 10 டிகிரி குளிரில் படம் பிடித்தது ரொம்ப சவாலாக அமைந்தது. பில்லா-2வில் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் ஒரு நல்ல அனுபவம். சினிமாவிற்கு வந்தபோது அவர் எப்படி இருந்தாரோ அதுபோல இப்பவும் இருக்கிறார். கதைக்கு எது தேவை, எப்படி நடிக்க வேண்டும், எந்தமாதிரி டிரஸ் போடவேண்டும் என்று படக்குழுவில் யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொண்டு நடிப்பவர். ஒரு பெரிய ஹீரோ என்ற பந்தாவே அவரிடம் கிடையாது என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (34) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (34)

கணேஷ் - chenna,இந்தியா
15 ஜூலை, 2012 - 06:55 Report Abuse
 கணேஷ் யோவ் தனிப்பட்ட முறையில ஒருத்தன் நல்லவன் என்றால் அது அவன் கடமை சினிமாவுல இவரு என்ன புடுங்குனாறு சும்மா நடந்துகிட்டே இருந்தா அது நடிப்பா தான் சம்பாதிக்கற தொழிலுக்கு இவனெல்லாம் என்ன மரியாதை செஞ்சான் மொதல்ல நல்ல படம் கொடுக்க சொல்லு அப்பறம் பாக்கலாம்
Rate this:
ரபி rocks - uae,ஐக்கிய அரபு நாடுகள்
14 ஜூலை, 2012 - 20:04 Report Abuse
 ரபி rocks இம்சை இம்ரான் appreciate யு .
Rate this:
selva - Muscat,இந்தியா
14 ஜூலை, 2012 - 16:54 Report Abuse
 selva Dai "Ajith summa" irunthalaum....... Allakai alapara thaanga mudiyalada...........saamy...........
Rate this:
இம்ரான் khan - riyadh,சவுதி அரேபியா
14 ஜூலை, 2012 - 15:49 Report Abuse
 இம்ரான் khan டை,வெட்டி பசங்களா போய் குச்சிமுட்டயும்,குருவி ரொட்டியும் தின்னுங்க .
Rate this:
kok - mn,விர்ஜின்( யூ.எஸ்.ஏ)
14 ஜூலை, 2012 - 10:18 Report Abuse
 kok ajith is good person that every body saying.................
Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in