ப்ரியா ஆனந்த் "குண்டு பார்முலா | "மேன் ஆப் ஸ்டீல் | பள்ளி பாட புத்தகத்தில்பிரியங்கா சோப்ரா | தீபிகாவிடம் நேற்று இல்லாத மாற்றம் | விஜய் - அமலா ஜோடி ரசிகர்கள் எதிர்பார்ப்பு | சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! |
இலங்கை தமிழர் பிரச்னை காரணமாக, அங்கு நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் இசைநிகழ்ச்சி, கலைநிகழ்ச்சி நடத்தவும், விருந்துகளில் பங்கேற்கவும் தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது எதிர்ப்புக்குள்ளாகி இருப்பவர் பாடகர் ஹரிகரன். இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற 7ம் ந்தேதி நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் ஹரிஹரன் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மே பதினேழு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசு 1 ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொன்றுள்ளது. இதை மறைக்க இலங்கை அரசு இசை மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இந்திய கலைஞர்களை அழைத்து நடத்த எண்ணுகிறது. அதன் சதியை புரிந்துகொண்டு திரையுலகினரும், இசையுலகினரும் விழாவை புறக்கணித்து வருகின்றனர். தமிழா தமிழா நாளை நம்நாளே என்று நம்பிக்கையூட்டும் ஹரிஹரன் குரலையே உலகம் கேட்க விரும்புகிறது. எனவே தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து இசை நிகழ்ச்சியை ஹரிஹரன் ரத்து செய்யவேண்டும், என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.