Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோச்சடையானை வாங்கியது ஜெயா டி.வி.! இந்தாண்டு இறுதியில் ரிலீஸ்!!

03 ஜூலை, 2012 - 16:13 IST
எழுத்தின் அளவு:

ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் டி.வி., உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஜெயா டி.வி. ரஜினி நடிப்பில், அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் உருவாகிவரும் படம் கோச்சடையான். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினி ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். இவர்களுடன் ஆதி, சரத்குமார், ஷோபனா, ருக்மணி, இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் என்று ‌ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்ச்செலவில் தயாரித்து வருகிறது. தற்போது படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது. இதனிடையே இப்படத்தின் வியாபார தகவலை ஈராஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது, ரஜினியுடன் கைகோர்த்து படம் பண்ணியது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினியின் முந்தைய படங்களான சிவாஜி, எந்திரன் படங்களை போன்று கோச்சடையான் படமும் மாபெரும் வெற்றி பெறும் என்று நம்புகிறோம். கோச்சடையான் படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளோம். இப்படத்தின் டிவி உரிமையை ஜெயா டி.வி, வாங்கி இருக்கிறது. தெலுங்கு உரிமையை கணபதி பிலிம்ஸ் பெற்றிருக்கிறது. மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டோக்கியோவிலும், பிரிமியர் காட்சிகளை லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈராஸ் நிறுவனம், கார்பன் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து கோச்சடையான் மொபைல் என்ற பெயரில் புதிதாக 5 லட்சம் ‌போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கோச்சடையான் போனில் கோச்சடையான் படத்தின் பட ஸ்டில்ஸ், டிரைலர், பாடல்கள், ஸ்கிரீன் சேவர், ரஜினியின் வசனங்கள் உள்ளிட்ட பல அம்சங்களும் இந்தபோனில் நிறைந்து இருக்கும். மேலும் டிஜிட்டல் முறையில் ரஜினிகாந்தின் கையெழுத்து மொபைலின் பின்புற பேனலில் அச்சிடப்பட்டு இருக்கும். இந்த மொபைல் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் கோச்சடையான ஆடியோ ரிலீஸின் போது வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருந்த கோச்சடையான படம், கிராபிக்ஸ் உள்ளிட்ட காட்சிகள் படத்தில் அதிகம் இருப்பதால் அதற்கான வேலையும் முடிய கால தாமதம் ஆகும் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்றும், ரஜினியின் பிறந்த நாளான 12-12.2012 அன்று இப்படத்தை வெளியிடக்கூடும் என கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

அக்பர் அந்தோணி - visaaka pattinam ,இந்தியா
08 ஜூலை, 2012 - 15:42 Report Abuse
 அக்பர் அந்தோணி சும்மா ஓவரா பில்ட் அப பண்றத விட்டு போட்டு நல்ல கதை உள்ள படங்களை வெளியிடுங்க..
Rate this:
07 ஜூலை, 2012 - 07:32 Report Abuse
 எ .செந்தில் குமார் ippadi solli solliye எங்கள்ள ஏமாத்தி பழக்கிட்டிக
Rate this:
karthil - tirupur  ( Posted via: Dinamalar Android App )
06 ஜூலை, 2012 - 20:28 Report Abuse
karthil சினிமாங்கராது just time, ஆனா என்னாமோ இவனுகதான் சினிமாவை கண்டுபுடிச்சவனுக மாதி்ரி கருத்து சொல்லாறானுக
Rate this:
B. ABDULRAZAK - MADURAI,இந்தியா
06 ஜூலை, 2012 - 16:54 Report Abuse
 B. ABDULRAZAK கோச்சடையான் 3D சினிமா வெளிவந்த பிறகுதான் படம் வெற்றியா, தோல்வியா என்பதை கூற முடியும். மேலும் டிவி உரிமையை ஜெயா டிவி வாங்கினதால் படம் எப்படி இருக்கும் என ஜெயா டிவி யாலே கணிக்க முடியாது. ஆகையால் பொறுத்திருந்து பார்ப்போம். ஏனென்றால் அதிக பட்ஜெட்டில் எடுத்த எத்தனையோ படங்கள் படு தோல்வி அடைந்து விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திரும்ப கொடுத்த வரலாறு உள்ளது என்பதை அறிவீர்கள்.
Rate this:
bhaskar - chennai  ( Posted via: Dinamalar Android App )
06 ஜூலை, 2012 - 14:01 Report Abuse
bhaskar super star, super movie, super fans...
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in