ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கேப்டன் டிவியில் ஞாயிறுதோறும் மாலை 5 மணிக்கு நினைவெல்லாம் சினிமா என்ற பெயரில் வித்தியாசமான நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ், ஹாலிவுட் சினிமா தவிர, இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமா பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும் காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இந்த நிகழ்ச்சி மறந்து போன பக்கங்கள், கவுபாய், பஞ்ச தந்திரம் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் பகுதியில் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமா பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும், காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இரண்டாவது பகுதியில் இந்திய மொழிகள் அல்லாத பிற மொழிப்படங்களில் இருந்து ஆச்சரியப்பட வைக்கும் செய்திகளுடன் அசத்தலான காட்சிகளும் ஒளிபரப்பாகிறது. பஞ்ச தந்திரம் எனப்படும் மூன்றாவது பகுதியில் சினிமாவில் நடைபெற்ற சுவையான, அதே சமயம் அநேக ரசிகர்கள் அறிந்திராத தகவல்கள் இடம் பெறுகின்றன. அவர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லாத அல்லது பார்க்க தவறிய காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன.