ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபசார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் | ஜப்பானின் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு! |
தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் தலைமையிலான, அட்ஹாக் கமிட்டிக்கு, சென்னை ஐகோர்ட், தடை விதித்துள்ளது. சட்டத்துக்கு முரணாக, இடைக்காலக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, இப்ராகிம் ராவுத்தர் தலைமையில், இடைக்காலக் குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழு சார்பில், கடந்த ஏப்ரல் மாதம் பொதுக்குழுக் கூட்டப்பட்டது. சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலர் தேனப்பன், பொருளாளர் தாணு ஆகியோரை பதவியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைகளில், ராவுத்தர் தலைமையிலான இடைக்காலக் குழு, தலையிடக் கூடாது என்றும், இடைக்காலக் குழு என்கிற பெயரில், பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டத்தையும் கூட்டக் கூடாது என்றும் உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், எஸ்.ஏ.சந்திரசேகரன், தாணு தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களில், "இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை எங்கள் சங்கத்துக்கான தேர்தல் நடக்கும். கடந்த அக்டோபரில் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. சங்க நடவடிக்கைகள் அனைத்தும் சங்க விதிகளின்படி நடக்கிறது. இந்நிலையில், சில நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்ததாகவும், அவர்கள் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து, இடைக்காலக் குழுவை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த இடைக்காலக் குழு, எங்களை, பதவியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்திருப்பதாக தந்தி அனுப்பியது. சங்க விதிகளில், இடைக்காலக் குழு ஏற்படுத்துவதற்கு வகை செய்யப்படவில்லை. எனவே, இப்ராகிம் ராவுத்தர் தலைமையிலான இடைக்காலக் குழுவானது சட்டவிரோதமானது. கடந்த ஏப்ரலில், இவர்கள் நடத்திய பொதுக் குழுக் கூட்டம் சட்டவிரோதமானது என உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இம்மனுக்களை விசாரித்த நீதிபதி சுப்பையா பிறப்பித்த உத்தரவு: ""உறுப்பினர்கள் ராஜினாமா விவகாரம் பற்றி, வழக்கு விசாரணையின் போது தான் முடிவெடுக்க முடியும். அவ்வாறு ராஜினாமா செய்திருந்தாலும் கூட, பொதுக்குழுவை கூட்டி புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி, பெரும்பான்மை உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம், குழு உறுப்பினர்களை நியமிக்க முடியும். எனவே, இடைக்காலக் குழு நியமனமானது, சங்கங்கள் பதிவுச் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது. நிர்வாகக் குழுவுக்கு இணையான ஒரு குழுவை நியமிக்க, நிர்வாகக் குழுவுக்கு அதிகாரமில்லை. எனவே, இடைக்காலக் குழுவை நியமிக்கலாம் எனக் கூறுவதை ஏற்க முடியாது.
பொதுக்குழுக் கூட்டம் நடப்பதற்கு முன், 21 நாட்கள் நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும். ஆனால், விதிமுறைகளின்படி, ஏப்ரல் 15ம் தேதி, கூட்டம் நடத்துவதற்கு முன், 21 நாட்கள் நோட்டீஸ் வழங்கப்படவில்லை. எந்த விளக்கமும் கோராமல், அந்தக் கூட்டத்தில் சந்திரசேகரன், தேனப்பன், தாணு ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். எனது கருத்துப்படி, இடைக்காலக் குழு அமைக்கப்பட்டதே, சட்ட விதிகளை மீறியது என்கிற போது, எந்த நோட்டீசும் கொடுக்காமல், இந்த மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்தது என்பது சட்டப்படி சரியல்ல.
சங்கத்தின் தலைவருக்கு வழக்கு தொடர உரிமையுள்ளது. எனவே, இடைக்காலக் குழு, சங்கங்கள் பதிவுச் சட்டத்துக்கு முரணானது. நிர்வாகக் குழுவில், தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே இடம் பெற முடியும். இடைக்காலக் குழு நியமிக்க, விதிகளில் இடமில்லை. விதிகளை மீறி, கடந்த ஏப்ரல் 15ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.எனவே, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால், மனுதாரர்களின் நலன்களுக்கு எதிராக இடைக்காலக் குழு செயல்படலாம். மனுதாரர்கள் கோரியபடி, இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சுப்பையா உத்தரவிட்டுள்ளார்.