‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சினிமாவுக்கே லாயக்கு இல்லாதவர் நடிகை பிராச்சி தேசாய் என்று டைரக்டர் மகிழ் திருமேனி கடுமையாக தாக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான தடையற தாக்க என்ற படத்தை இயக்கியவர் மகிழ் திருமேனி. இப்படத்தின் ஹீரோயினாக முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் இந்தி நடிகை பிராச்சி தேசாய். ஆனால் திடீரென அவர் அப்படத்தில் இருந்து விலக மோகன்தாஸ் ஹீரோயினாக தேர்வு செய்து படமும் முடிந்தும் ரிலீசாகிவிட்டது.
இந்நிலையில் இப்படத்தில் பிராச்சி தேசாய் நடிக்க மறுத்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் டைரக்டர் மகிழ் திருமேனி இதுகுறித்து கூறியுள்ளதாவது, தடையற தாக்க படத்திற்காக பிராச்சி தேசாயை தேர்வு செய்து, அவரிடம் கதை சொன்னபோது, அவருக்கும் கதை பிடித்து போனது. எனது முந்தைய படங்கள் வயதுக்கு மீறிய கதைகளாக இருந்தன. ஆனால் இந்த படம் என் வயதுக்கு ஏற்ற கதை. நிச்சயம் நடிப்பேன் என்று அட்வான்சும் வாங்கினார். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வந்த நிலையில், திடீரென நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். இதனால் அவரது காட்சிகளை படமாக்க முடியாமல் ரொம்ப சிரமப்பட்டேன். அதன்பிறகு பலமுறை தொடர்பு கொண்டும் நடிக்க வரவில்லை. சினிமாவுக்கு லாயக்கு இல்லாத நடிகை பிராச்சி தேசாய். இனிமேல் என் படங்களில் நடிக்க அவரை அழைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.