சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
பாலிவுட் நடிகைகளை விட தென்னிந்திய நடிகைகளிடம் தான் புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் அதிகமாக இருப்பதாக நடிகை சானா கான் தெரிவித்துள்ளார். தமிழில் சிலம்பாட்டம், ஆயிரம் விளக்கு, தம்பிக்கு எந்த ஊரு போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சானாகான். சமீபத்தில் இவர் பெயரில் ஒரு நடிகை விபாச்சாரத்தில் கைதாகி, அது இவர் என்று பெரிய பிரச்னையாக உருவெடுத்தது. இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை வந்த சானா கான், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், விபச்சார வழக்கில் கைதானது நான் தான் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். எனக்கும் அந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் அப்படியொரு செய்தி வந்தபோது ரொம்பவே நொந்து போனேன். நான் மும்பை பெண்ணாக இருந்தாலும் கட்டுபாட்டோடு தான் இருக்கிறேன். எனக்கு இதுவரைக்கும் ஒரு பாய்பிரண்ட் கூட கிடையாது. ஆண்டுக்கு 30முறை விரதம் இருக்கிறேன். மது, சிகரெட் போன்று எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. எல்லாரும் பாலிவுட் நடிகைகள் தான் அதிகமாக மது மற்றும் புகைப்பழக்கம் உடையவர்கள் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பாலிவுட் நடிகைகளை காட்டிலும் தென்னிந்திய நடிகைகளிடம் தான் இதுபோன்ற பழக்கம் அதிகம் இருக்கிறது. நிறைய நடிகைகள் குடித்துவிட்டு தள்ளாடிபோவதை நானே பலமுறை பார்த்திருக்கிறேன் என்றார்.