Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மோதிரத்திற்காக வனிதா-ஆனந்த்ராஜ் கோர்ட்டில் சண்டை...!

Vanitha - Anandraj clash at Court
சென்னை குடும்ப நல கோர்ட் வளாகத்தில், நடிகை வனிதாவுக்கும், அவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் கோர்ட் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளாவின் மகள் வனிதா. இவருக்கும் நடிகர் ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்தனர். விவாகரத்தும் செய்து கொண்டனர். இதையடுத்து, ஆனந்தராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மகன் விஜய் ஸ்ரீஹரி யாருடன் இருப்பது என்பதில் வனிதாவுக்கும், ஆகாஷுக்கும் பிரச்னை ஏற்பட்டது. ஆகாஷ் உடன் இருப்பேன் என விஜய் பிடிவாதமாக இருந்தான். வனிதாவுடன் செல்ல மறுத்தான். இதனையடுத்து மீண்டும் முதல் கணவர் ஆகாஷ் உடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார் வனிதா.

இதன்பின்னர், ஆனந்தராஜ் உடன் வனிதாவுக்கு பிரச்னை ஏற்பட்டது. பரஸ்பரம் விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வனிதா, ஆனந்தராஜ் இருவரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். மனு விசாரணைக்கு வருவதற்கு முன், பரிசாக வழங்கிய வைர மோதிரத்தையும், மொபைல் போனையும் திருப்பித் தருமாறு, வனிதாவிடம் ஆனந்தராஜ் கேட்டார். நீதிபதி முன் கையெழுத்திடும் போது, மோதிரத்தை தந்து விடுவதாக வனிதா கூறினார். இதனால் கோபமடைந்த ஆனந்தராஜ், கோர்ட்டில் இருந்து வெளியேறினார்.

பின்னர் திரும்பி வந்த அவரை வனிதா திட்டினார். மோசமான வார்த்தையால் திட்டியதற்கு, மன்னிப்பு கேட்டால்தான் கோர்ட்டுக்குள் வருவேன் எனக் கூறிவிட்டு, ஆனந்தராஜ் புறப்பட்டார். மன்னிப்பு கேட்குமாறு, வனிதாவிடம் அவரது வழக்கறிஞர்கள் கூறினர். ஆனந்தராஜை வழிமறித்து, அவரது காலைத் தொட்டு வனிதா மன்னிப்பு கேட்டார். அதைத் தொடர்ந்து ஆனந்தராஜ், கோர்ட்டுக்குள் வந்தார். பின்னர், வழக்கை தனது அறையில் நீதிபதி கிருஷ்ணமூர்த்தி விசாரித்தார். பின்னர், இருவரும் வெளியே வந்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வனிதாவின் வழக்கறிஞர் விஜயராஜ் சமாதானம் செய்தார். இந்த வழக்கு விசாரணையை 16ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Tags »
Vanitha, Anandraj, clash, Court, கோர்ட், வனிதா, ஆனந்த்ராஜ், சண்டை,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

sarab - Dubai,இந்தியா
2012-06-09 16:52:17 Report Abuse
 sarab எத்தனை பேரு வந்தாலும் இவ அடங்கவே மாட்டாள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kannan - Singapore,சிங்கப்பூர்
2012-06-09 16:50:04 Report Abuse
 Kannan இது பிரச்சினைக்கு தனியா ஒரு கோர்ட் வேனுமட்டுக்கே.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
குமார்விஜை - ellis bridge,இந்தியா
2012-06-09 16:37:00 Report Abuse
 குமார்விஜை எப்படி உன்னால் காலில் விழுந்து கும்பிட முடிஞ்சது, உடம்பில் எடை குறைந்தால் இது சாத்தியம், தலையில் எடை குறைந்தால் எதுவும் சாத்தியம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பெரிய பூ பையன் - kallai ,இந்தியா
2012-06-09 15:14:05 Report Abuse
 பெரிய பூ பையன் அட தூ பசங்களா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ramesh - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
2012-06-09 14:52:39 Report Abuse
ramesh ரொம்ப முக்கியம்........த்தூ......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in