Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மணிரத்னத்தின் கடலில் இருந்து சமந்தா விலகல்! ராதாவின் 2வது மகள் ஹீரோயின் ஆனார்!!

09 ஜூன், 2012 - 11:21 IST
எழுத்தின் அளவு:

 மணிரத்னத்தின் கடல் படத்தில் இருந்து சமந்தா திடீரென விலகியதையடுத்து, அவருக்கு பதில் ஹீரோயினாக ராதாவின் 2வது மகள் துளசி களம் இறங்க உள்ளார். ராவணன் படத்திற்கு டைரக்டர் மணிரத்னம் இயக்கி வரும் புதிய படம் கடல். இப்படத்தின் ஹீரோவாக நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க ஒப்புக்கொள்ளப்பட்டு படத்தின் ஷூட்டிங்கும் கடந்த மாதம் தொடங்கியது. மீனவர்களின் வாழ்க்கையையும், அதில் ஒரு அழகான காதலையும் சேர்த்து இப்படத்தை இயக்கி வருகிறார் மணி.

ஷூட்டிங் நடந்து வந்தநிலையில் சமந்தா, திடீரென இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கான காரணம் தெரியவில்லை. சமீபகாலமாகத்தான் தமிழில் நிறைய பட வாய்ப்புகள் சமந்தாவுக்கு குவிந்து வருகிறது. தற்போது நீதானே என் பொன்வசந்தம், ஷங்கர் படம், இதுதவிர வெங்கட்பிரபு என்று வரிசையாக படங்கள் வருகிற வேலையில் கடல் படத்தில் இருந்து சமந்தா திடீரென விலகியிருப்பது ஏன்.? எதற்கு...? என்று ஆயிரத்து எட்டு கேள்விகள் சமந்தாவை நோக்கி எழ ஆரம்பித்து இருக்கிறது. ஆனால் இதுவரை சமந்தா எந்தபதிலும் சொல்லவில்லை.

இதனிடையே சமந்தா விலகியதை அடுத்து, அந்த இடத்திற்கு மாஜி கதாநாயகி ராதாவின் 2வது மகள் துளசியை அணுகியுள்ளார் மணிரத்னம். அவர்களும் ஓ.கே. சொல்லியுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே தனது மூத்த மகள் கார்த்திகாவை ஹீரோயினாக களம் இறக்கியுள்ள ராதா, இப்போது தனது 2வது மக‌ள் துளசியையும் ஹீரோயினாக்கியுள்ளார். அதுவும் முதல்படமே மணிரத்னம் படம்.

1981-ம் ஆண்டு கார்த்திக்கும், ராதாவும் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமானார்கள். அதேபோல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களின் வாரிசுகளும் ஒரே படம் (கடல்) மூலம் ஹீரோ-ஹீரோயினாக அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

வெங்கட் - chennai,இந்தியா
09 ஜூன், 2012 - 19:09 Report Abuse
 வெங்கட் ஆல் தி பெஸ்ட் மணிரத்னம் சார் அஜித் சார் வச்சி ஒரு படம் பன்னுங்கு சார் ப்ளஸ்
Rate this:
john - dindigul,இந்தியா
09 ஜூன், 2012 - 13:35 Report Abuse
 john வாழ்க்கைக்கு தேவையனத பேசுங்கப்பா !
Rate this:
தங்கபாண்டி - hosur,இந்தியா
09 ஜூன், 2012 - 12:59 Report Abuse
 தங்கபாண்டி சூப்பர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in