'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
"உன்னாலே உன்னாலே, ஜெயங்கொண்டான், மோதிப்பார் படங்களுக்கு பிறகு, "மிரட்டல் படத்தில் நடித்துள்ள வினய், அடுத்து, "இருவர் உள்ளம் என்ற படத்தில் நடிக்கிறார்.
இதுபற்றி வினய் கூறும்போது, "இருவர் உள்ளம் படத்தில் காதல் கலந்த "சென்டிமென்ட் கதையில் நடிக்கிறேன். இந்த படத்தை, "திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், கிங் உட்பட, 14 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரமேஷ்.ஜி இயக்குகிறார். கதைப்படி, இந்த படத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வைத்தால் நன்றாக இருக்கும் என, டைரக்டர் சொன்னதால், கடந்த இரண்டு மாதங்களாக, தலையில் முடி வளர்த்து வருகிறேன். அதோடு, 10 கிலோ வரை உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளேன் என சொல்லும் வினய், எந்த படமாக இருந்தாலும், கதைக்கு தேவையானபடி "கெட்டப்பை மாற்றி நடிக்க தயாராக இருக்கிறேன். அதனால், எந்த மாதிரியான வித்தியாசமான கதைகள் என்றாலும், தயங்காமல் டைரக்டர்கள் என்னை அணுகலாம் என்கிறார்.