Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

எங்களது கடின உழைப்பினை அங்கீகரித்த தமிழ் ரசிகர்களுக்கு இதய பூர்வமான நன்றிகள் : ப்ருத்விராஜ்!

Prithiviraj thanks to tamil fansகலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில், ப்ருத்விராஜ், ஆர்யா, பிரபுதேவா, ஜெனிலியா, வித்யாபாலன், தபு, நித்யா மேனன் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து, தமிழில் வெளிவந்திருக்கும் உருமி படம் கடந்தவாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் ஆர்யா, பிரித்விராஜ், இசையமைப்பாளர் தீபக் தேவ் மற்றும் உருமி படத்தின் ஆடை வடிமைப்பாளர் ஏகா, தயாரிப்பாளர் தாணு ஆகியோர் தமிழ் ரசிகர்களுக்கு தங்களது  நன்றியினை தெரித்துக் கொண்டனர்.

அப்போது பேசிய ப்ருத்விராஜ், உருமி திரைப்படத்தை சத்யம் திரையரங்குக்கு சென்று பார்த்த போது இது நம்ம படம்தானா என்கிற சந்தேகமே எனக்கு வந்துவிட்டது..அந்த அளவிற்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக உருமி ஓடிக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. எங்களது கடின உழைப்பினை அங்கீகரித்த தமிழ் ரசிகர்களுக்கு இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்‌கிறேன். உருமி ஒரு வருடத்திற்கு முன் மலையாளத்தில் வெளியாகி இருந்தாலும் தமிழுக்கென்று பாடல், திரைக்கதை அமைத்து இப்பொழுது வெளியாகியிருக்கிறது. உருமியைத் தமிழ் ரசிகர்களுக்கு இவ்வளவு பிரமாண்டமான முறையில் வழங்கியிருக்கும் கலைப்புலி எஸ் தாணு அவர்களுக்கு மிகவும் நன்றி.

உருமி மலையாளத்தில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். சந்தோஷ் சிவனின் திட்டமிட்ட உழைப்பில் கிட்டத்தட்ட 65 நாட்களில் எடுக்கப்பட்ட படம். ஆர்யா,பிரபுதேவா, ஜெனிலியா, வித்யாபாலன், நித்யா மேனன் , தபு என்று இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் சம்பளத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நமது முன்னோர்களின் வீரம், பண்பு, கலாச்சாரம் மற்றும் அந்நியர்களை எதிர்த்துப் போராடிய தீரம் ஆகிய வற்றை பதிவு செய்யும் படமாகையால் மிகவும் ஆர்வத்துடன் நடித்தனர். மிகச்சிறந்த நடிகர்கள் மத்தியில் நானும்  நடித்திருப்பதால் எனக்கான ஒரு தனி அடையாளமாக எனது கதாபாத்திரம் அமைந்து விட்டது. 14-15 ஆம் நூற்றாண்டுகளில் நம் மீது திணிக்கப் பட்ட அந்நிய ஆதிக்கம் இன்னும் பல ரூபங்களில் நம்மை ஆக்ரமித்துக் கொண்டுள்ளது….பொருட்கள் வடிவிலும் அறிவு சார்ந்த வகையிலும்….

இந்தப் படத்திற்காக 6 மாதங்கள் கடினமாக உழைத்து எனது உடலை முறுக்கேற்றினேன். எனது தமிழ் உச்சரிப்பு மிகவும் கம்பீரமாகவும் சிறப்பாகவும் வந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எனது நண்பரும் உருமியின் வசனகர்த்தாவுமான சசிகுமார்தான். மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் பேசிவிட்ட உருமி விரைவில் ஆங்கிலம் பேச இருக்கிறது. இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜப்பான் வாங்கியிருப்பதே உருமியின் வெற்றிக்குச் சான்று. படத்தின் முக்கியத்துவம் சிதைந்து விடாமல் தமிழில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வெளியிட்டிருப்பது போன்று ஹிந்தியில் யாராவது முன்வந்தால் நிச்சயம் ஹிந்தியிலும் உருமி வெளியாகும்… இன்னும் பத்து வருடம் கழித்துப் பார்த்தாலும் புதிதாகத் தெரியும் அளவிற்கு காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் சிவன் என்று கூறினார்.

Tags »
Prithiviraj, ப்ருத்விராஜ்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

jennifer - cochin,இந்தியா
2012-06-05 00:41:25 Report Abuse
 jennifer டேய்,,,நாங்க தமிழனை ''பாண்டி'' என்று கொச்சையாக பேசுவோம்.முழு தமிழ் இனத்தையும் கேவலமாக பேசுவோம். எங்கள் படம் ஓட வேண்டும் என்றால் உங்களை புகழுவோம்,,கேவலம் .; மலையாள படங்களில் தமிழன் நடித்தால் தீ வைத்து கொளுத்துவோம், கலைபுலி தாணுவுக்கு தமிழ் நடிகர்கள் கிடைக்கவில்லை. எங்களுக்கு அடிமை வேலை பார்கதான் தமிழர்கள் நீங்கள்,,,ஹ ஹ ஹ ஆஅ,,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பொன் குமார் - aruppukottai,இந்தியா
2012-06-03 16:36:23 Report Abuse
 பொன் குமார் சிறந்த வரலுரு படம் , உண்மையான முயற்சி குழுவினர்க்கு வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in