ப்ரியா ஆனந்த் "குண்டு பார்முலா | "மேன் ஆப் ஸ்டீல் | பள்ளி பாட புத்தகத்தில்பிரியங்கா சோப்ரா | தீபிகாவிடம் நேற்று இல்லாத மாற்றம் | விஜய் - அமலா ஜோடி ரசிகர்கள் எதிர்பார்ப்பு | சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! |
"கலகலப்பு படத்தில், விமலும் சிவாவும், "இவளுக இம்சை தாங்க முடியல என்று அஞ்சலி, ஓவியாவைப் பார்த்து பாடினர். ஆனால், இப்போது அஞ்சலியோ, "ரசிகருங்க இம்சை தாங்க முடியல என்று சலித்துக்கொள்கிறார்."அப்படி என்ன பண்ணிவிட்டனர் ரசிகர்கள்? என்று கேட்டால், ""போன்ல பேசியே என்னை கொல்றாங்க. சரி, ரசிகர்களாச்சேன்னு இரண்டு வார்த்தை பேசினா, விட மாட்டேங்கறாங்க. மணிக்கணக்குல கடலை போடுறாங்க. அதுவும் "கலகலப்பு படத்துக்கு பின், என் அழகை அவங்க வர்ணிக்கிறது ரொம்ப அதிகமாயிடுச்சு. உங்க நடை அப்படி இருக்கு, உங்க இடை இப்படி இருக்குன்னு... என்னென்னவோ, கவிதையா சொல்றாங்க. ஒருத்தர், இரண்டு பேரு இப்படி சொன்னா ரசிக்கலாம். ஆனால், போன் பேசுற அத்தனை பேருமே லவ் பண்ற ரேஞ்சுக்கு பேசுனா, நான் என்னங்க பண்றது, என்று சிணுங்குகிறார் அஞ்சலி. ரசிகர்களின் அன்புத் தொல்லை சந்தோஷமான விஷயம் தானே, என்றால், ""ஒரு நாள், இரண்டு நாள்னா பரவாயில்லை. தினமும் இதே வேலையா இருந்தா எப்படி. பகல் முழுக்க ஷூட்டிங் போயிட்டு வர்ற நான், இரவு தூங்க வேணாமா? அதனால் இப்பல்லாம் நான் போன் எடுக்கறதே இல்லை. சினிமாக்காரங்ளே பேசினா கூட, அம்மா தான் பதில் சொல்வாங்க, என்கிறார் அஞ்சலி.