ஷார்மியின் 12 வருடகலை சாதனை | "இந்தியில் நடிக்க நேரமில்லை | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும்வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! | "நவ் யு சி மீ | "ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை | எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் |
என்னுடைய பழைய அடையாளத்தை மாற்ற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு, இப்போது மனம் கொத்தி பறவை மூலம் நிச்சயம் மாறும் என்று நம்புகிறேன் என டைரக்டர் எழில் கூறியுள்ளார். துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எழில். இப்போது சிவ கார்த்திகேயன், ஆத்மியாவை வைத்து மனம் கொத்தி பறவை என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் குறித்து டைரக்டர் எழில் பேசும்போது, என்னுடைய முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு, முழுநீள காமெடி படமாக இப்படத்தை இயக்கியுள்ளேன். மாயவரம் பக்கத்தில் உள்ள கயத்தாறு என்ற என் கிராமத்தில் உள்ள பண்ணை தெருவில் இப்படத்தை படமாக்கி இருக்கேன். ஹீரோ-ஹீரோயின்களுக்குள் ஏற்படும் காதல், ஊடல், அவர்களின் உள்உணர்வு இப்படி வழக்கமான காதலில் அந்த கிராமத்து காதலை புதிய முயற்சியில் சொல்லி இருக்கேன். இந்தபடத்தில் சிவ கார்த்திகேயனை கமிட் செய்தும் போது அவர் டி.வி.யில் மட்டுமே நடித்து வந்தார். அதன்பிறகு இப்போது அவர் பிஸியான நடிகராகிவிட்டார். எனக்கும் அது ப்ளஸ் தான். மனம் கொத்தி பறவை படத்தில் சிவ கார்த்திகேயன் காமெடி பண்ணவில்லை. ஆனால் அவர் செய்யும் எந்த செயலும் காமெடியில் முடியும். மற்றபடி காமெடியில் வெண்ணிற ஆடைமூர்த்தி தொடங்கி பரோட்டா சூரி வரை பெரும் பட்டாளத்தையே இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறேன்.
படத்தின் ஹீரோயின் ஆத்மியா என்ற புதுமுகம் நடித்துள்ளார். இவர் கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர். மொழி புரிந்து கொள்பவர். மற்றபடி பேசுவதில் கொஞ்சம் சிரமம் இருந்ததால், ஷூட்டிங் போகும் முன்னாலே எட்டு நாட்கள் பயிற்சி கொடுத்தோம். கிராமத்து ரோலில் ரொம்ப அழகாக நடித்துள்ளார். பல முறை என்னுடைய அடையாளத்தை மாற்ற வேண்டும் என்று பெண்ணின் மனதை தொட்டு, அமுதே படங்களிலேயே முயற்சி செய்தேன். ஆனால் அது சரியா வரவில்லை. ஆனால் இப்போது மனம் கொத்தி பறவை படம் என் ஸ்டைலை மாற்றும் என்று நம்புகிறேன். ஜூன் 1ம் தேதி முதல் மனம் கொத்தி பறவை ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று கூறியுள்ளார்.