ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி |
டைரக்டர் அமல்நீரர் இயக்கத்தில் நடிகை பத்மபிரியா நடித்து வரும் புதிய மலையாள படம் பேச்சலர்ஸ் பார்ட்டி. இப்படத்தில் முதல் முறையாக பத்மப்ரியா ஒரு குத்துப் பாட்டுக்கு கவர்ச்சிகரமாக ஆடியுள்ளாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், குத்துப்பாட்டுக்கு நான் எதிரானவள் கிடையாது. அதை ஒருபோதும் வெறுத்ததில்லை. அதுவும் சினிமாவில் ஒரு அங்கம்தான். எனக்கு டான்ஸ் பிடிக்கும். அதிலும் குத்துப்பாட்டு என்றால் ஜாலியாக இருக்கும். ஒன்றரை நாளிலேயே இந்தப் பாட்டைப் படமாக்கி விட்டனர், என்றார்.
பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் குத்துப் பாட்டுக்களுக்கு நாயகிகளே நடனமாடுவது என்பது சாதாரண விஷயம்தான். ஆனால் மலையாளத்தில் மட்டும் அப்படி ஒரு சம்பவம் இதுவரை நடைபெற்றதில்லை. ஆனால் முதல் முறையாக பத்மப்ரியா ஒரு படத்தில் குத்துப் பாட்டுக்கு கவர்ச்சிகரமாக ஆடியுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.