‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கைநிறைய படங்களை வைத்திருக்கும் ஒரே நடிகை என்றால், அது நயன்தாரா தான். அதிர்ஷ்டக்கார நடிகை என்று திரையுலகில் பெயர் பெற்றிருக்கும் நடிகையான நயன்தாராவுக்கு, 2019 துவக்கமே அதிர்ஷ்டகரமாக அமைந்துள்ளது.
பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தை அடுத்து, 'கொலையுதிர் காலம்' படம் ரிலீசாக இருக்கிறது. அதற்கு அடுத்ததாக 'ஐரா' படம், மே மாதத்தில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவைகள் இல்லாமல் 'விஜய் 63', 'சயிரா நரசிம்மரெட்டி', அருண்குமார் இயக்கும் படம், 'லவ் ஆக்ஷன் டிராமா' என்ற மலையாளப் படம் என, மேலும் நான்கு படங்களை 2019ன் துவக்கதிலேயே கையில் வைத்திருக்கும் நயன்தாரா, அடுத்தடுத்து எத்தனை படங்களில் நடிப்பார் என தெரியவில்லை. இருந்தாலும், 'வருடத்துக்கு ஆறு படங்கள் என்பதே ஒரு நடிகைக்கு மிகப் பெரிய விஷயம்' என சினிமா வட்டாரங்கள் ஆச்சரியமாக கூறுகின்றன.