Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நிவின்பாலி 2018 ; ஒரு பார்வை

30 டிச, 2018 - 15:59 IST
எழுத்தின் அளவு:
How-is-2018-for-Nivin-pauly

கடந்த வருடம் பெரிய அளவில் சாதனைகள் எதுவும் நிகழ்த்தாத மலையாள நடிகர் நிவின்பாலி, இந்த வருடம் தனது பங்களிப்பாக இரண்டு படங்களை மட்டுமே கொடுத்துள்ளார். இந்த வருட துவக்கத்தில் மலையாளத்தில் வெளியான 'ஹே ஜூடு' என்கிற படம் நிவின்பாலியின் இன்னொரு விதமான நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தி இருந்தது. ஞாபகத்திறன் குறைந்தவராக இந்த படத்தில் நிவின்பாலி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார் இந்த படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்ததுடன், 50 நாட்களை கடந்தும் ஓடியது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிவின்பாலி நடிப்பில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் காயம்குளம் கொச்சுண்ணி என்கிற வரலாற்று படம் வெளியானது இந்த படத்தில் மோகன்லாலும் 20 நிமிடம் வந்து போகும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் அதனாலேயே இந்த படம் முதல் நாள் வசூலாக 6.4 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனை செய்தது. அதுமட்டுமல்ல மிக குறுகிய நாட்களிலேயே 100 கோடி வசூலை எட்டி இன்னும் ஒரு புதிய சாதனையை சொந்தமாக்கியது

இந்த படத்தில் காயம்குளம் கொச்சுன்னியாக நடிப்பிலும் உருவ மாற்றத்திலும் கடினமான உழைப்பை தந்திருந்த நிவின்பாலி, அந்த உழைப்புக்கேற்ற பலனையும் அறுவடை செய்து விட்டார் அந்த வகையில் இந்த 2018 ஆம் வருடம் நிவின்பாலிக்கு ஒரு வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்துவிட்டது

வரும் 2019;ல் மைக்கேல் என்கிற படத்திலும், நயன்தாராவும் ஜோடியாக லவ் ஆக்சன் ட்ராமா என்கிற படத்திலும் நடித்து வருகிறார் மேலும் அவர் நடிப்பில் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட மூத்தோன்' என்கிற படமும் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in