Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒத்தைக்கு ஒத்தை வாடா, சவால் விடும் 'விஸ்வாசம்' டிரைலர் - விமர்சனம்

30 டிச, 2018 - 14:27 IST
எழுத்தின் அளவு:
Viswasam-Trailer-Vimarsanam

2019 பொங்கலுக்கு ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட', அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. இரண்டு படங்களுக்கும் இடையே தியேட்டர்களைப் பிடிப்பதில் பலத்த போட்டி உள்ளது.

இந்த நிலையில், 'பேட்ட' படத்தின் டிரைலர் இரண்டு நாளைக்கு முன்பு வெளிவந்தது. அதில் 'விஸ்வாசம்' படத்தையும் கிண்டலடிக்கும் விதத்தில் காட்சிகள் இருந்ததாக அஜித் ரசிகர்கள் கோபமடைந்தனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக 'விஸ்வாசம்' டிரைலர் வர வேண்டும் என அவர்கள் விரும்பினர். அஜித் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடியே 'பேட்ட' டிரைலருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக 'விஸ்வாசம்' டிரைலர் வெளிவந்துள்ளது.

'பேட்ட' டிரைலரின் கடைசியில் ரஜினிகாந்த் “ஏய், எவனுக்காவது, பொண்டாட்டி, குழந்தை, குட்டின்னு சென்டிமென்ட், கின்டிமென்ட் இருந்தால், அப்படியே ஓடிப் போயிடு, கொல காண்டுல இருக்கேன், மவனே, கொல்லாம விட மாட்டேன்,” என வசனம் பேசியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக 'விஸ்வாசம்' பட டிரைலரில் அஜித் பேசும், “உங்க மேல கொல கோவம் வரணும்,” என ஒரு வசனமும், பின்னர் டிரைலரின் முடிவில், “பேரு தூக்குதொர, தேனி மாவட்டம், ஊரு கொடுவிலார்பட்டி, பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா, ஒத்தைக்கு ஒத்தை வாடா,” மீசையை நீவிவிட்டு சவால் விடுகிறார். இது 'பேட்ட' ரஜினியின் வசனத்திற்கு பதிலடி கொடுப்பதாகவே உள்ளது.

'விஸ்வாசம்' டிரைலரின் ஆரம்பத்திலேயே ரோபோ சங்கரின் பின்னணி குரல் ஒலிக்க, அஜித் கதாபாத்திரம் பற்றிய பில்ட் அப்புடன் டிரைலர் ஆரம்பமாகிறது. “வாழ்க்கையில ஒரு தடவ அழாத பணக்காரனும் இல்ல, ஒரு தடவ சிரிக்காத ஏழையும் இல்ல,” என அஜித் வசனமும் பேச, அஜித் நடப்பது, வேட்டியை மடித்துத் தூக்குவது, மீசையை நீவுவது, கையெடுத்துக் கும்பிடுவது, சட்டையை மடித்துவிடுவது என அஜித்தைக் காட்டாமலே செம பில்ட்அப் கொடுக்கிறார்கள்.

'பங்காளிங்களா, அடிச்சித் தூக்கலாமா' என வசனம் பேசிக் கொண்டே எதிரிகளை அடித்துவிட்டு டிரைலரில் என்ட்ரி ஆகிறார் அஜித். இளமையான அஜித்தும் வருகிறார், நரைத்த தலைமுடி, தாடி, மீசை என கொஞ்சம் நடுத்தர வயது அஜித்தும் வருகிறார். இருவரும் ஒருவரா அல்லது படத்தில் அஜித் இரு வேடங்களா என்பது குழப்பம்தான்.

நயன்தாராவைப் பார்த்து 'நீங்க பேரழகு' என காதல் வசனம் பேசுகிறார். படத்தின் வில்லன் ஜெகபதிபாபு, “என் கதையில நான் ஹீரோடா' என வசனம் பேச பதிலுக்கு அஜித் 'என் கதையில நான் வில்லன்டா' என 'மங்காத்தா' வசனமான 'நானும் எவ்வளவு நாளைக்குதான் நான் நல்லவனா நடிக்கிறது' என்ற காட்சியை ஞாபகப்படுத்துகிறார்.

டிரைலரின் கடைசியில் வில்லன் ஜெகபதிபாபுவிடம், “ஏறி மிதிச்சன்னு வையி, ஏரியா வாங்குறதில்ல, மூச்சைக் கூட வாங்க முடியாது,” என பன்ச் வசனம் பேசுகிறார்.

நகைச்சுவையில் ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா கலக்குவார்கள் எனத் தெரிகிறது.

'பேட்ட, விஸ்வாசம்' இரண்டு படங்களின் தியேட்டரைப் பிடிப்பதில் கடும் போட்டி இருக்கும் நிலையில் ஏரியா வாங்குவதைப் பற்றிய பன்ச் வசனம் பேட்ட படத்திற்குத்தான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

அஜித் ரசிகர்கள் எந்த மாதிரியான ஒரு டிரைலரை எதிர்பார்த்தார்களோ அப்படிப்பட்ட ஒரு டிரைலரைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா. இருந்தாலும் 'வீரம்' படத்தின் சாயல் அங்கங்கு வந்து போகிறது.

இமானின் பின்னணி இசையும் காட்சிக்குத் தக்கபடி மிரட்டலாக இருக்கிறது. 'பேட்ட' டிரைலர் போலவே இந்த டிரைலரிலும் பாடல்கள் இல்லை.

டிரைலர் வெளியான அரை மணி நேரத்திற்குள்ளாகவே 3 லட்சம் லைக்குகளைக் கடந்துவிட்டது டிரைலருக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

பொங்கல் 2019 வெளியீடு என்றுதான் டிரைலரில் கூறியுள்ளார்கள். ஆனால் சத்யஜோதி பிலிம்ஸின் டுவிட்டர் பக்கத்தில், படம் ஜன.,10ம் தேதி வௌியாகிறது என அறிவித்துள்ளனர். இதன்மூலம் 'பேட்ட' வெளியாகும் ஜனவரி 10ம் தேதியே 'விஸ்வாசம்' வெளியாகிறது.

விஸ்வாசம் - தூக்குதுரையின் தூக்கல்...!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in