ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பேட்ட படத்தை முடித்துவிட்டு ரிலீஸை எதிர்நோக்கி உள்ளார் ரஜினி. அதுவரை விடுமுறையை அமெரிக்காவில் குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். மருமகன் தனுஷ் உடன் அவர் ஜாலியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த படங்கள் வைரலாகி வருகின்றன.
பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்த படம் முதல்வன் பட பாணியில் உருவாவதாகவும், அந்த படத்திற்கு நாற்காலி என்ற டைட்டில் வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், முருகதாஸைத் தொடர்ந்து சதுரங்கவேட்டை எச்.வினோத் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அஜித்தை வைத்து பிங்க் ரீ-மேக்கை இயக்க தயாராகி வரும் வினோத், அடுத்து ரஜினியை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் ரஜினியுடன் அவரது மருமகனான தனுஷ் முதன்முறையாக ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக கோலிவுட்டில் காட்டு தீ போன்று ஒரு செய்தி பரவி வருகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
ரஜினியுடன் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக பல பேட்டிகளில் கூறி வந்திருக்கிறார் தனுஷ். அதனால் இது நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.