Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் » விஸ்வரூபம் ஸ்பெஷல்

விஸ்வரூபம் பட முன்னோட்டம் அடுத்த மாதம் வெளியீடு!

Kamals vishwaroopam preview to be release in singapore
விஸ்வரூபம் படத்தின் முன்னோட்டம் அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வெளியிடப்பட இருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.  இதுபற்றி அவர் கூறுகையில், என் இயக்கம் மற்றும் துணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் விஸ்வரூபம் படத்தின் முன்னோட்டம், ஜுன் 2012ல் சிங்கப்பூரில் நடைபெற உள்ள 13வது சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் முதல் முறையாக திரையிடப்பட இருக்கிறது.

விஸ்வரூப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தி பதிப்பின் முன்னோட்டம், ரபல்ஸ் நகர கன்வென்ஷன் மையத்தில் ஜுன் 8ம்தேதி முதல்முறையாக வெளியிடப்பட உள்ளது. என்னுடன் ராகுல் போஸ், ஆன்ட்ரியா ஜெர்மியா, பூஜா குமார், ஜெய்தீப் லாவத், சாம்ராட் சக்கரவர்த்தி, ஜெரினா வகாப், சேகர் கபூர் ஆகியோரின் சிறப்பு தோற்றத்துடன் இந்த படம் உருவாகி உள்ளது. ஜுன் 7 முதல் 9 வரையிலான தேதிகளில் சிங்கப்பூர் லயன் சிட்டியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஸ்ரேயா, தெலுங்கு பட அதிபர்கள் கே.எஸ்.ராமாராவ், சுரேஷ்பாபு, அல்லு அரவிந்த் மற்றும் பலர் பங்கேற்கிறார்கள். பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது, என்றார்.

Tags »
Kamal, vishwaroopam, கமல், விஸ்வரூபம்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

ஊ ஊ ஊத்தப்பன் - sangku nagar,இந்தியா
2012-05-28 14:43:57 Report Abuse
 ஊ ஊ ஊத்தப்பன் படத்துக்கு பேரு சங்கே முழங்கு...னு வைக்கலாம்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Ram - Chicago,யூ.எஸ்.ஏ
2012-05-26 22:53:57 Report Abuse
 Ram Another junk movie from Kamal.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ச.RAJA - chennai,இந்தியா
2012-05-26 15:23:13 Report Abuse
 ச.RAJA தலைவா நீ வரும் நாளை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் ரசிகன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in