ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காதல் படத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் பரத். அதன் பிறகு சில படங்கள் அவருக்கு கை கொடுத்தாலும், காதல் போன்று பெயர் வாங்கி கொடுக்கும் படம் இல்லாத ஏக்கம் அவரிடம் இருந்து வருகிறது. அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் உள்ளதாம் அவர் நடிக்கும் புதிய படம் 555. சசி இயக்கி வரும் இப்படம் முழு நீள ஆக்ஷன் படமாம். அதற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக உருவாக்கி வருகிறார் பரத். தனக்கு திரும்பு முனையை ஏற்படுத்தும் படமாக இது இருக்கும் என்று கூறும் பரத், படத்தின் கதைக்கு 6 பேக்ஸ் தேவைப்படுவதால் தினமும் ஜிம்மில் கடுமையாக உழைத்து வருகிறாராம். இப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். இப்படத்திற்கான சில முக்கியக் காட்சிகள் மலேசியாவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.