'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விகாஷ் பால் இயக்கத்தில் கங்கனா ரணவத் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளிவந்த படம் 'குயின்'. அந்தப் படம் கங்கனாவுக்கு சிறந்த நடிகைகக்கான விருதையும் பெற்றுத் தந்தது. அப்படத்தை ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்கிறார்கள்.
நான்கு மொழிகளின் டீசர்களையும் கடந்த வாரம் வெளியிட்டார்கள். தமிழில் 'பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் படம் ரீமேக் ஆகி வருகிறது. காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். நான்கு மொழி டீசர்களிலும் தமிழ் டீசர்தான் 40 லட்சம் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. மற்ற மொழிகளில் தெலுங்கு டீசர் 21 லட்சம் பார்வைகளையும், கன்னடம் 7 லட்சம், மலையாளம் 6 லட்சம் பார்வைகளையும் மட்டுமே பெற்றுள்ளன.
தமிழ் டீசரில் 42வது வினாடியில் இடம் பெற்றுள்ள ஒரு ஆபாசக் காட்சிதான் இப்படிப்பட்ட ஒரு வரவேற்பு கிடைக்கக் காரணமாக உள்ளது. மற்ற மொழி டீசர்களில் அந்தக் காட்சியை சேர்க்கவில்லை. அப்படி ஒரு காட்சியில் காஜல் அகர்வால் எப்படி நடித்தார் என்பதும் ஆச்சரியமாக உள்ளது.
அந்தக் காட்சி பற்றி படத்தின் ரமேஷ் அரவிந்த் கூறுகையில், “ஹிந்தியில் அப்படிப்பட்ட காட்சி இருக்கிறது. அதையேதான் தமிழிலும் எடுத்துள்ளோம். அந்தக் காட்சியை டீசரில் சேர்த்திருப்பதால் அது கவனம் பெறுகிறது. அந்தக் காட்சிக்கு முன்பும், பின்பும் என்ன நடக்கிறது என்பது தெரிந்தால் அது பற்றி பேச மாட்டார்கள்,” என்று கூறியிருக்கிறார். எப்படியோ, ஒரு சர்ச்சையால் படத்தைப் பற்றிப் பேச வைத்துவிட்டார்கள்.