ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கிட்டத்தட்ட 5௦ நாட்களுக்கு ஒரு படம் என்கிற ரீதியில் விஜய்சேதுபதியின் படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக அவரது நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் ஷில்பா என்கிற திருநங்கையாக நடித்துள்ளார்
இந்த கதாபாத்திரம் பற்றி இயக்குனர் கூறியபோது, எப்போது இந்த படத்தை நீங்கள் இயக்கினாலும் அந்த ஷில்பா கேரக்டரில் நான் தான் நடிப்பேன் என்று உறுதிபட கூறி அதன்படியே நடித்தும் முடித்துவிட்டார்.
இந்த கேரக்டருக்காக எந்த ஒரு திருநங்கையையும் அவர் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு நடிக்காமல், தானே ஒரு திருநங்கையாக இருந்தால் எப்படி உணர்ந்திருப்போம் என நினைத்து அதையே தனது நடிப்பில் வெளிக்கொண்டு வந்துள்ளார். விருதுக்காக விஜய்சேதுபதி இந்த கேரக்டரில் நடிக்கவில்லை என்கிறார்.