'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தலைப்பில் சொன்னபடி ஒரு தகவல் திரையுலக வட்டாரங்களில் உலவி வருகிறது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ இல்லையோ கீர்த்தி சுரேஷுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியைத் தரும். வதந்தியாக வருவது எத்தனையோ பின்னர் நிஜமாக மாறியிருக்கிறது. அப்படி இந்த வதந்தியும் உண்மையாக மாறினால் கீர்த்தியை விட யாருக்கு மகிழ்ச்சி அதிகம் இருக்கும்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படம் பற்றி இன்னும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஆனாலும், படத்தைப் பற்றி அடிக்கடி ஏதாவது ஒரு தகவலை எப்படியோ கசிய விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் பற்றி ரஜினிகாந்த் இன்னும் ஓகே சொல்லவில்லை என்றும் ஒரு பக்கம் செய்திகள் உலா வருகின்றன. அப்படியிருந்தும் இப்போது படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
'சர்கார்' படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். அதில் கீர்த்திக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. ரஜினியுடன் தமிழில் உள்ள பல ஹீரோயின்களும் நடித்துவிட்டார்கள். அதனால், கீர்த்தி, ரஜினி ஜோடியாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.