'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
காப்பி, காப்பிரைட் ஆகிய சிக்கல்களில் அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் எழுதிய 'கோலமாவு கோகிலா' படத்தின் 'கல்யாண வயசு' பாடல் யு டியூபிலிருந்து நீக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த வருடத்திய சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றாக அமைந்த பாடல் அது. வெளியான சில நாட்களிலேயே 1 கோடி பார்வைகள், நம்பர் 1 டிரென்டிங் என அந்தப் பாடல் உச்சத்தைத் தொட்டது.
நயன்தாரா, யோகிபாபு இருவரும் நடித்த அந்தப் பாடல் கடந்த வாரத்திலிருந்து யு டியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடலை அனிருத் ஆங்கிலப் பாடல்களிலிருந்து காப்பியடித்தார் என்ற சர்ச்சை ஆரம்பம் முதலே இருந்தது. ஆனால், படத்தை உரிய உரிமை வாங்கி பயன்படுத்தியதாக அனிருத் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
யு டியுபில் 6 கோடிக்கும் அதிகமான ஒரு பாடல் இப்போது, அதுவும் வருட இறுதியில் ஆண்டின் சூப்பர்ஹிட் பாடல்களைக் கணக்கிடும் போது காணாமல் போயிருப்பது ஆச்சரியமாக உள்ளது. 'கோலமாவு கோகிலா' படத்தின் இசை உரிமையை வாங்கி வைத்துள்ள நிறுவனம் மீண்டும் அந்தப் பாடலை யு டியூபில் வரவழைக்குமா என அனிருத் ரசிகர்களும், சிவகார்த்திகேயன் ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.