ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி 2 படத்தில் நடித்த பிரபாஸ் - அனுஷ்காவும் அந்த படம் வெளியான நேரத்தில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. இரண்டு பேருமே அதை மறுத்தனர். பிரபாசுக்கு பெண் தேடி வருவதாக அவரது பெற்றோர் கூறியதைப் போன்று, அனுஷ்காவுக்கும் வரன் பார்த்து வருவதாக அவரது பெற்றோர் செய்தி வெளியிட்டனர்.
இந்நிலையில், பாகுபலி 2வைத் தொடர்ந்து சாஹோ படத்தில் நடித்துள்ள பிரபாஸ், விரைவில் தனது 20வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் மீண்டும் அனுஷ்கா அவருடன் இணைந்து நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேப்போல் கோனா வெங்கட் தயாரிக்கும் ஒரு தெலுங்கு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் அனுஷ்கா. அப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் நடைபெறுகிறது.
முன்னதாக, ஆயுர்வேத சிகிச்சைகள் மேற்கொண்டு ஸ்லிம்மாக காட்சி கொடுத்து வரும் அனுஷ்கா, பல மாதங்களுக்கு பிறகு தற்போது சில சினிமா நண்பர்களின் இல்ல விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். அப்போது அவரது ஸ்லிம்மான தோற்றத்தைப்பார்த்த பிறகு தான் அனுஷ்காவிற்கு இந்த புதிய படங்கள் புக்காகியிருக்கிறதாம்.