இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
காஞ்சனா-2விற்கு பிறகு தமிழில் கேம் ஓவர் என்ற படத்தில் நடிக்கிறார் டாப்சி. ஹிந்தியில் அமிதாப்பச்சனுடன் இணைந்து இவர் நடித்த, பிங்க் படம், தற்போது அஜித்தின் 59வது படமாக தமிழில் ரீமேக் ஆகிறது. டாப்சி சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர்.
சமீபத்தில் ஒரு நபர், உங்களது உடல் பாகங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என டுவீட் செய்துள்ளார். இதற்கு டாப்சி, வாவ், எனக்கும் ரொம்ப பிடிக்கும். குறிப்பாக செரிப்ரம் பிடித்த அங்கம், உங்களுக்கு பிடித்த அங்கம் எது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நம்முடைய உடம்பிலுள்ள பெருமூளையைத்தான் செரிப்ரம் என்பார்கள். அதுதான் நம்முடைய நினைவாற்றல், அறிவாற்றல் மற்றும் நல்லது கெட்டதை நமக்கு புரிய வைக்கக்கூடியது. அது சரியாக வேலை செய்யாதவர்களைத்தான் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பார்கள். தனக்கு ஆபாச செய்தி அனுப்பியவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் டாப்சி.