தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனின் காதலுக்கு வில்லனாக நடித்தாலும், ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்காமல் பரிதாபத்தை அள்ளிக்கொண்டவர் மலையாள நடிகர் அன்சன் பால். அதைத் தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அன்சன் பால், ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் என்ற படத்தில் மம்முட்டியின் தம்பியாக முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்
இதையடுத்து, தற்போது சூப்பர் மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து மலையாளத்தில் உருவாகும் புதிய படத்தில் சூப்பர்மேனாக நடிக்க இருக்கிறார். 'ஒரு மெக்சிகன் அபராதா' என்கிற ஹிட் படத்தை கொடுத்த டாம் எம்மாட்டி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் குழந்தைகள் மத்தியில் அன்சன் பாலுக்கு நல்லதொரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று உறுதியாக சொல்கிறார் இயக்குனர்.