ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலாஜி மோகன் - தனுஷ் கூட்டணியில் உருவாகி உள்ள மாரி 2 படம் வருகிற டிச.,21ம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் படத்தில் நடித்துள்ள தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி, டொவினோ தாமஸ், இயக்குநர் பாலாஜி மோகன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், நான் பிரமித்து பார்த்த ஒரு நட்சத்திரம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. துள்ளுவதோ இளமை என்கிற படம் ஆள் அட்ரஸ் தெரியாத 6 புதுமுகங்கள் இணைந்து நடித்த படம். அந்தப்படத்திற்கு அடையாளமே தந்ததே யுவனின் இசை தான். அந்தப்படம் ஓடவில்லை என்றால் நிஜமாகவே நாங்கள் நடுத்தெருவில் தான் நின்றிருப்போம். அந்த சூழ்நிலையில் தான் அன்று நாங்கள் இருந்தோம்.
துள்ளுவதோ இளமை மற்றும் காதல் கொண்டேன் படங்கள் மிகப்பெரிய ஹிட்டாக யுவன் இசை தான் காரணம். அந்த அஸ்திவாரத்தைப் போட்டுக் கொடுத்ததில் யுவன் பெரிய பங்கு இருக்கிறது. சில தவறாக நினைத்தாலும் பரவாயில்லை. 20 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்ல இருக்கும் இசையமைப்பாளர்களின் பெயர் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் யுவனின் பெயர் மட்டும் அப்படியே இருக்கிறது. அடுத்து அவர் அஜித்தின் படத்திற்கு இசையமைக்க உள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.
மாரி 2 வெற்றிப் பெற்றால் நிச்சயம் மாரி 3 எடுப்போம். 21ம் தேதி ரிலீஸாகும் மற்ற படங்களான சீதக்காதி, கனா போன்ற படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இவ்வாறு தனுஷ் பேசினார்.