'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவருமே முக்கியமானவர்கள். விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று ரசிகர்களைக் கவர்கிறார். சிவகார்த்திகேயன் கமர்ஷியலான கதாபாத்திரங்களை ஏற்று ரசிகர்களைக் கவர்கிறார். இருவரும் பயணிக்கும் திசை வேறு வேறாக இருக்கிறது. இருப்பினும் இருவரையுமே இப்போது போட்டியாளர்களாகத்தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். அந்தப் போட்டி அவர்கள் கவுரவத் தோற்றத்தில் நடிப்பதிலும் அமைந்திருப்பது ஆச்சரியமான ஒன்று.
விஜய் சேதுபதி கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ள 'சீதக்காதி' படம் நாளை மறுநாள் 20ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் முதல் அரை மணி நேரத்தில் மட்டுமே விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதன் பின் மீதிப் படம் வேறு நடிகர்களுடன் பயணிக்கிறது. சிவகார்த்திகேயன் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ள 'கனா' படம் டிசம்பர் 21ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனும் அரை மணி நேரம் இடம் பெறுகிறார் என ஒரு தகவல்.
பட விளம்பரங்களில் முதலில் தன்னைத் தவிர்த்து வந்த சிவகார்த்திகேயன் வெளியீடு நெருங்க, நெருங்க படம் முழுவதும் அவர் இருப்பது போன்று விளம்பரங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டார். கவுரவத் தோற்றத்தில் நடித்துவிட்டு இருவருமே இப்படி தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்தை வாங்கியவர்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.