சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
ரஜினி நடித்த 2.0 படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் படம் இந்தியன்-2. மீண்டும் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவர் நடிக்கும் முக்கிய வேடமான இந்தியன் தாத்தா வேடத்திற்கான ஒத்திகைகள் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்தன.
அதேபோல் இப்படத்தில் நாயகியாக நடிக்கும் காஜல் அகர்வாலுக்கும் கமலைப்போன்று வர்மக்கலை, களரி பயிற்சி எடுக்கும் வேலைகளும் நடந்தேறி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 14-ந்தேதி முதல் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்குவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், அந்த தேதியில் படப்பிடிப்பு நடைபெறவில்லையாம். ஜனவரி மாதம் தான் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருக்கிறாராம் டைரக்டர் ஷங்கர்.