ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய்சேதுபதி, லட்சுமி மேனன் நடித்த றெக்க' படத்தை இயக்கியவர் ரத்தின சிவா. இந்தப்படத்தை அடுத்து சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் ரத்தினசிவா சொன்ன கதை பிடித்து ஓகே., சொன்ன சிம்பு, அதன்பிறகு என்ன காரணத்தினாலோ அவரது படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.
எனவே வெறுத்துப்போன ரத்தின சிவா, வேறு ஹீரோக்களிடம் கதை சொல்ல முயற்சி எடுத்தார். அதன்படி ஜீவாவை சந்தித்து கதை சொன்னார். அவரது கதையைக் கேட்டு ஓகே சொன்ன ஜீவா தற்போது ரத்தின சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் என்ற நடிகை நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மும்பையை சேர்ந்த இவர் தெலுங்கு 'பேப்பர் பாய்' மற்றும் நானி ஹீரோவாக நடித்த 'மஞ்சு' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
ரத்தின சிவா இயக்க, ஜீவா நடிக்கும் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப்படத்தில் ஐ.டி.துறையில் வேலை செய்பவராக நடிக்கிறார் ரியா சுமன்.