10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு |
பிக்பாஸ் புகழ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் படம் ராஜ பீமா. இதனை நரேஷ் சம்பத் இயக்குகிறார். எஸ்.மோகன் தயாரிக்கிறார். ஆரவ் ஜோடியாக விஜய் ஆண்டனி ஜோடியாக கொலைகாரன் படத்தில் நடித்த ஆஷிமா நெர்வால் நடிக்கிறார். இது மனிதனுக்கும், யானைக்குமான உறவை சொல்கிற படம். ஆரவ், யானை பாகனாக நடிக்கிறார்.
தற்போது, இதன் படப்பிடிப்புகள் பொள்ளாச்சி, பாலக்காடு, கோவை பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படத்தில் புதிதாக இணைந்திருக்கிறார் ஓவியா. இதில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஓவியா, ஒரு பாடலுக்கும் நடனம் ஆடுகிறார். இந்த நடன காட்சிகள் பொள்ளாச்சி பகுதியில் படமாக்கப்பட்டது. ஓவியா நடிக்கவும், ஆடவும் கணிசமான தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.