'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த படத்தில் அவரது இசையில் ஒய்திஸ் கொலவெறி என்றொரு பாடலை எழுதினார் தனுஷ். அந்த பாடல் உலக அளவில் பிரபலமானது. அதன்பிறகு பல படங்களில் தனக்கு மட்டுமின்றி மற்ற நடிகர்களுக்காகவும் பாடல் எழுதியும், பின்னணி பாடியும் வருகிறார் தனுஷ்.
இந்த நிலையில், தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள ஜெயில் படத்திலும் ஒரு பாடல் பின்னணி பாடியிருக்கிறார் தனுஷ். இந்த பாடலும் ஒய்திஸ் கொலவெறியைப்போன்று ஒரு துள்ளலான டியூனில் உருவாகியிருக்கிறதாம். இதே படத்தில் மணிரத்னத்தின் காற்றுவெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்த அதிதிராவ் ஹைதரியும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.