பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
இப்போதெல்லாம் தான் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களில் குழந்தைகளைக் கண்டாலே குஷியாகி விடுகிறார் நயன்தாரா. அவர்களை கொஞ்சி மகிழ்கிறார். அப்படித்தான் இமைக்கா நொடிகள் படத்தில் தனது மகளாக நடித்த மானஸ்வியை கொஞ்சி மகிழ்ந்தார் நயன்தாரா. அவரது உண்மையான பாசத்தைப் பார்த்த மானஸ்வி, இப்போதுவரை நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வருகிறார்.
அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஜேஷ்.எம் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நார்வேயில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு சிறுமியுடன் நயன்தாரா கொஞ்சி மகிழும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சிறுமி அந்த படத்தில் நடிக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை.