மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ஹவாலா. இதனை ஆப்பிள்ஸ் அண்ட் பியர்ல்ஸ் பிலிம்ஸ் சார்பில் பிரவீன் குமார் ஷெட்டி தயாரிக்கிறார். சீனிவாஸ், அமித்ராவ், அமுல்யா, சஹனா ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் நிழல்கள் ரவி, ரஜேந்திர நாத் உள்பட பலர் நடிக்கிறார்கள். சூரியகாந்தி ஒளிப்பதிவு செய்கிறர், கிஷோர் எக்ஸா இசை அமைக்கிறார். படத்தை பற்றி இயக்குனர் அமித்ராவ் கூறியதாவது:
ஹீரோக்கள் இருவருக்கும் பெரிய அண்டர்கிரவுண்ட் தாதாவாகி ஹவாலா பணத்தில் மிதக்க வேண்டும் என்கிற ஆசை. இதற்காக அந்த நெட்ஒர்க்கில் இணைகிறார்கள். அதன் பிறகு இருவருக்கும் அழகான காதல் அமைகிறது. தாதா நெட்ஒர்க்கிலிருந்து விலகி வந்தால்தான் கல்யாணம் என்று காதலிகள் கண்டிஷன் போடுகிறார்கள். ஆனால் தாதா நெட் ஒர்க் ஒருவழிபாதை, உள்ளே போகத்தான் முடியும், வெளியில் வர முடியாது. அதையும் மீறி வெளியில் வந்தார்களா, காதலிகளை கை பிடித்தார்களா என்பதுதான் கதை. என்றார்.