ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நீண்ட நாட்களுக்கு பிறகு மம்முட்டி தெலுங்கில் நடித்துள்ள படம் யாத்ரா. அறிமுக இயக்குனர் .மஹி ராகவ் இயக்கியுள்ள இந்தப்படம் டிச-20ஆம் தேதி வெளியாகும் என பல மாதங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் இந்தப்படத்தின் தேதி மாற்றப்பட்டு, புதிய தேதிக்கான ஆலோசனை நடந்துகொண்டு இருந்தது.
இப்போது புதிய ரிலீஸ் தேதியாக பிப்-8ஆம் தேதியை உறுதி செய்துள்ளார்கள். அனேகமாக இனி இந்த தேதியில் பெரிய மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கேரக்டரில் மம்முட்டி நடித்துள்ளார். 2004ல் ஒய்.எஸ்.ஆர் மேற்கொண்ட அரசியல் பாதயாத்திரையும் அரசியலில் அது ஏற்படுத்திய மாற்றமும் இந்தப்படத்தின் கதை.