கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
மோகன்லால் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான படம் 'ஒடியன்' இந்தப்படம் வெளியான முதல் வசூல் ரீதியாகவும், தியேட்டர்களின் எண்ணிக்கையிலும் பல புதிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேரளாவில் நேற்று திடீரென ஒரு கட்சியினர் பந்த் நடத்தியதால் ஒடியன் படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாம்.
குறிப்பாக போராட்டக்காரர்களின் மிரட்டலுக்கு பயந்து நேற்று பல தியேட்டர்கள் பகல் காட்சிகளை ரத்து செய்தன. ரசிகர்கள் காட்சிகள் மட்டும் ஓரளவுக்கு தடையில்லாமல் நடைபெற்றனவாம். அதுமட்டுமின்றி படமும் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பை அவ்வளவாக பூர்த்தி செய்யவில்லை என பரவிய செய்திகளும் கூட படத்தை பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.