அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
புதுமுகம் ஷாம்கான் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் படம் காதல் மட்டும் வேணா. சாந்தன் அன்பழகன் இசை அமைத்துள்ளார், ஜேஎஸ்கே ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் உக்ரைன் நாட்டு மாடல் அழகி எலிசெபத் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதுபற்றி இயக்குனர் ஷாம்கான் கூறியதாவது:
சினிமாவில் நடிக்கும் ஆசையில் நிறைய பேரிடம் வாய்ப்பு கேட்டேன். யாரும் தரவில்லை. நான்கு வருடமாக போராடியும் நடக்கவில்லை. இதனால் நானே படம் எடுத்து நானே ஹீரோவாக நடிக்கிறேன். எனக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளிடம் கேட்டேன். புதுமுகத்துடன் நடிக்க மறுத்தார்கள். நடிக்க ஒப்புக் கொண்ட சிலரும் பெரிய சம்பளம் கேட்டார்கள். இதனால் மாடல் கோர் ஆர்டினேட்டரிடம் கேட்டபோது அவர் சில மாடல்களின் படங்களை கொடுத்தார். அதில் ஒருவர்தான் எலிசபெத்.
இவர் எங்கள் கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்றபோது. இவர் உக்ரைன் நாட்டில் இருக்கும் இந்திய வம்சாவளி பெண். ஆனால் நடிக்க வரமாட்டார் என்றார். நாங்கள் பேசி பார்க்கறோம் என்று அவரிடம் போன் நம்பர் வாங்கி பேசினோம். அப்போது அவர் இந்திய படத்தில் நடிக்கும் விருப்பத்தில் இருந்தார். எங்கள் கதையும் அவருக்கு பிடித்துப்போகவே இந்தியா வந்து 20 நாட்கள் தங்கியிருந்து படத்தில் நடித்து கொடுத்துவிட்டுப் போனார். தமிழ் தெரியாவிட்டாலும் ஆங்கிலத்தில் சொன்னதை அப்படியே புரிந்து கொண்டு நடித்தார். இந்தப் படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். என்றார்.